சினிமா எடுக்க வாரீகளா – விஜய் ஆனந்த்.K

சினிமாத் தயாரிப்பு, இயக்கம், வெளியிடுவது பற்றிய ஒரு குறுந்தொடர்.

அத்தியாயம் 1. உதவி இயக்குனராகச் சேர்வது.

சினிமா இயக்குனராக வேண்டுமானால் முதலில் நாம் உதவி இயக்குனராகச் சேரவேண்டும்.

5- 10 வருடங்களுக்கு முன் உதவி இயக்குனராகச் சேருவதே பெரும்பாடு. அதற்காக ஒரு இயக்குனரைச் சந்திப்பதற்கே பல மாதங்கள் ஏன் பல வருடங்கள் கூடக் காத்திருக்க வேண்டும். அதன் பின் உதவி இயக்குனராகச் சேர்ந்து 2 – 3 படங்கள் பணியாற்றி விட்டு ஒரு படம் தனியே இயக்க வேண்டுமென்றால் மொத்தத்தில் ஒரு 15 வருடங்களாவது ஆகி விடும்.

இன்றைக்கோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. பெருகி வரும் மீடியாத்துறை சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சி அவர்களைத் தேடிப்போய் உதவி இயக்குனர் வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

அத்தகைய மீடியாத்துறை சார்ந்த படிப்பு படிக்கும் மாணவர்கள் தன் படிப்பை முடிக்கும் முன்பே 2- 3 குறும்படங்களை இயக்கி விடுகிறார்கள். அந்த வகையில் சினிமாத் துறையில் இருக்கும் 24 துறைகளையும் கையாள்வதில் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.  தொழில் நுட்ப வளர்ச்சி இன்று ஒரு லேப் டாப்பிலேயே வீட்டில் இருந்து கொண்டே ஒரு குறும்படத்திற்குத் தேவையன போஸ்ட் புரொடக்‌ஷன் என்று சொல்லப்படும் எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங் மற்றும் சில அனிமேஷன் & கிராபிக்ஸ் உட்பட படப்பிடிப்பிற்குப் பிந்தைய வேலைகள் அனைத்தையும் செய்து விட முடியும்.

அசுர வளர்ச்சி கண்டுள்ள மீடியாத்துறை அவர்களது குறும்படங்களைக் கொண்டு சேர்க்கும் களங்களாக ஒரு வரப்பிரசாதங்களாத் திகழ்கின்றன. சேனல்களில் ஒளிபரப்பப்படுவது முதல் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் குறும்பட விழாக்களில் பங்கு பெற்று பல லட்சங்களைப் பரிசாக வெல்லும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

அதன் பிறகு ஒரு நல்ல சினிமா இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களது சொந்தப் படைப்புத் திறனை மேம்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். எந்த ஒரு பெரிய படைப்பாளியிடம் பணியாற்றும் போதும் அவரது படைப்புத் திறன் உங்களுடன் ஒட்டிக் கொண்டு வந்து விடப்போவதில்லை. பெரிய படைப்பாளிகளின் படங்களில் பயன்படுத்தும் தொழில் நுட்ப அறிவு வேண்டுமானால் வளரலாம். அதுகூட இன்று இண்டெர் நெட்டில் ஏராளமாகக் கிடைக்கிறது. அதி நவீனத் தொழில் நுட்பம் கொண்டு எடுக்கப்பட்ட படங்களின் “மேக்கிங்” வீடியோக்களும் சம்பந்தப்பட்ட மென்பொருள்களும் சகட்டுமேனிக்குச் உடனுக்குடன் சந்தைக்கு வந்து விடுகின்றன.

ஒரு சிறந்த படத்தைக் கொடுக்கவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் / போராடிக் கொண்டிருக்கும் உதவி இயக்குனருக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளை சினிமாத்துறையில் இருப்பவர்களே போட்டுக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. பெரிய நடிகர்களை மனதில் வைத்துக் கொண்டு கதை எழுதும் பழக்கமும் இன்று கெட்டபழக்கமாகிப்போய் விட்டது. இன்றைக்குக் கதைக்கேற்ற கதாபாத்திரங்களைக் கண்டு பிடித்து கதை நாயக/ நாயகிகளாக்கும் முறை கிட்டத்தட்ட அனைத்து இளம் இயக்குனர்களாலும் பின்பற்றப்பட்டு புதிதாக வரும் படைப்பாளிகளுக்குப் பெரிய நம்பிக்கையினை அளித்திருக்கிறது.

தன் மனம் கவர்ந்த நடிகர்கள் நடித்த படம் என்பதனையும் தாண்டி ஒட்டு மொத்தமாகத் தரமான படம் என்கிற எதிர்பார்ப்பும் திரைப்பட ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சினிமா வியாபாரத்தை தன் சட்டைப்பாக்கெட்டில் வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு இருந்த ஜாம்பவான்களின் சட்டைப்பாக்கெட்டுகள் தாங்கள் கொடுக்கும் படங்களில் தரம் இருந்தால் மட்டுமே  நிரம்பும் நிலை , தரமில்லையேல் கிழிந்து தொங்கிவிடும் அல்லது கிழிக்கப்பட்டுவிடும் என்கிற அளவிற்கு இன்று ரசிகர்களிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய படைப்பாளிகளிடம் திட்டமிடுதல் வளர்ந்திருக்கிறது. சினிமாவை ஒரு மாய உலகம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலை மாறி சினிமாவும் ஒரு

Still from the Movie Sooran

நேர்த்தியான  “தொழில்” (Profession) என்கிற அளவிற்கு ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை தொழில் (Profession –புரொஃபெஷன் ) என்றால் அது டாக்டர் அல்லது இன் ஜினியர் என்கிற நிலைமை மாறி சாஃப்ட்வேர் புரொஃபெஷன் என்று ஒன்று வந்தது. இன்று மீடியாவும் புரொஃபெஷன் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. Diploma in Film Technology, VISCOM, Electronic Media, Film Animation போன்ற மீடியா துறை சார்ந்த கல்விப்பிரிவுகளின் வளர்ச்சி இன்று பல மீடியா புரொஃபெஷனல்ஸ் ஐ (Media Professionals) உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. அதன் மூலம் சினிமா தயாரிப்பதும் இயக்குவதும் புரொஃபெஷன் (Profession) ஆகிப்போனது.

மீடியாத்துறை சார்ந்த படிப்புகள் என்பதனையும் தாண்டி, தன் படைப்புத்திறன் மீது நம்பிக்கை கொண்டு திரைப்படத்துறைக்கு வரும்   புதியவர்களுக்கு பிரசித்த் பெற்ற கல்வி நிறுவனங்கள்- புகழ் பெற்ற சினிமா பிரபலபங்களைக் கொண்டு நடத்தும் Workshops என்று அழைக்கப்படும் குறுகிய காலப் பயிற்சிகளும் ஒரு பெரிய வரப்பிரசாதமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் அடிப்படைக் கல்வியறிவு பெறாதவர்கள் கூட இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு சினிமா சம்பந்தமான விஷய்ங்களைக் கிரகித்துக் கொள்ள முடியும்.

எடுக்கும் சினிமாவை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதும் முன்பு ஒரு சவாலகவே இருந்தது. சினிமாச் செய்திகளும் விளம்பரங்களும் பெருமளவில் பிரிண்ட் மீடியாவை மட்டுமே நம்பி இருந்தன. அதில் வாசிக்கும் பழக்கம் இருக்கும் மக்களிடம் மட்டுமே அவற்றைக் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. அதன் பிறகு வந்த தொலைக்காட்சிகள் / வானொலிகள் மூலம் இன்னும் கொஞ்சம் அதிக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடிந்தது. இன்றோ இண்டெர்நெட் யுகத்தின் அசுர வளர்ச்சி பல கோடி மக்களை இணைக்கிறது, அதன் மூலம் சினிமாவைப்பற்றிய செய்திகள் நொடிப்பொழுதில் அத்துனை பேரிடமும் பரிமாறப்பட்டு விடுகின்றன.   தொலைத் தொடர்பிலும் மீடியாத்துறையிலும் ஏற்பட்டிருக்கும் அசுர வளர்ச்சி இன்றி சினிமாத் தயாரிப்பையும் அதனை விளம்பரப்படுத்துவதையும் எளிதாக்கி விட்டன. அதன் வாயிலாக அதிகம் பிரபலம் ஆகாத   நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு எளிதில் கொண்டு போய் சேர்க்க முடிகிறது.

உதவி இயக்குனர் என்றால் சமுதாயத்திலும் சில அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. ஏன் குடும்பத்தில் கூட. ஆனால் இன்று பெற்றோர்களே தங்கள் குழந்தைகளின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்பும் மீடியாத்துறை சார்ந்த படிப்பில் சேர்த்து விடுவதும் அதன் தொடர்புடைய படிப்புக்களைப் படிக்க ஊக்கம் கொடுப்பதும்   நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

விஜய் ஆனந்த்.K

Stills :

1.Director Selvaraghavan in action in Mayakkam Enna Shootig Spot

2.From Sooran

5 Comments

  1. Sudharshan says:

    Unmai!!! Konjam kaalam munnaal indha valarchi yerppatirundhaal enakku mootha thiramayaana udhavi iyakkunargalukkum vaaippu kidaithirukkum. avargal kaanaamal poiyirukka maataargal… thamizh cinemavum thalai thookki irukkum… Better Late than never…

  2. VARADA DESIGAN says:

    மிக சரியாக சொன்னீர் நண்பரே..!!!

  3. Karnal says:

    Good luck Vijay. You still have your turn and time.

  4. F.Rafeeq says:

    Good article.

  5. Gaayathri says:

    Romba Unmaiyaana Pala vishayathai Soneergal

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks