சமீபகால இந்திய சினிமாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் நாவல்கள் இதிகாசங்களை அடிப்படையாக வைத்துப் படம் எடுக்கிறார்கள். எழுத்து வடிவில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகளை திரையில் கொண்டு வரத் தயங்கும் நிலை இங்கு உள்ளது. ஆனால் ஹாலிவுட்டில் இருக்கும் நிலையே வேறு. ஏற்கனவே காமிக்ஸ்களாக,நாவல்களாக வந்த படைப்புகளை துணிச்சலாகப் படமெடுக்கிறார்கள். அப்படைப்புக்கு பிரம்மாண்டத்தையும் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் பக்கப் பலமாக வைத்து கொண்டு சாதித்து விடுகிறார்கள். அதனை அங்குள்ள ரசிகர்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் விரும்பிப்பார்க்கிறார்கள்.
ரிஸ்க் கதையான மூன்று மாவீரர்கள் படத்தை ரஸ்க் சாப்பிடுவது போல இயக்குனர் பால் W.S.ஆண்டர்சன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே Resident Evil பட வரிசை முலம் கலக்கியவர்.மில்லா ஜோவாவிச்( நடிகை),இயக்குனர் பால் W.S.ஆண்டர்சன் இருவரும் சேர் ந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே வசூல் சாதனை புரிந்தவை. The three musketeers படம் முலம் அதை மீண்டும் நிருபிக்க வருகின்றனர்.இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடதக்கது. உலகமெங்கும் வரும் வெள்ளி முதல் வெளி வருகிறது .இது ஒரு PVR picturesவெளீயீடு








ரிஸ்க் கதையான மூன்று மாவீரர்கள் படத்தை ரஸ்க் சாப்பிடுவது போல இயக்குனர் பால் W.S.ஆண்டர்சன் இயக்குகிறார்………………….plz don’t write these silly words while doing review or preview
இது பேச்சு வழக்கில் அனுப்புப்பட்ட செய்தி…அதனை அப்படியே பிரசுரித்திருக்கிறேன்… கமெண்டுகளில் புகுந்து விளையாடுவதற்கு நன்றி… உங்கள் ஆலோசனைகளை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன்…