9th CIFF – இயக்குனர் சங்கம் புறக்கணிப்பு

9வது சென்னை உலகத்திரைப்பட விழாவினைத் தமிழ நாடு இயக்குனர்கள் சங்கம் புறக்கணிப்பதாக அதன் செயலாளர் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் (Indian Cine Appreciation) ஒரு தனியார் அமைப்பு 2003-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை நடத்தி வருகிறது. இதேபோன்று இந்த ஆண்டும் 9வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் திங்கள் 14 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற படமான தென்மேற்குப் பருவக்காற்று, மற்றும் ஈழப்போரின் உச்சத்தில் இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் வெறியாட்டத்தினைத் தொடர்ந்து தமிழகத் தமிழர்களின் யதார்த்தமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்த செங்கடம் லீனா மணிமேகலை இயக்கியிருக்கும் இத்திரைப்படம் இந்தியன் பனோரமாவில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு தமிழ்சினிமாவிற்குப் பெருமைகளைத் தேடிக்கொடுத்தது. அத்தகைய தரமான தமிழ் சினிமாக்களைப் புறக்கணித்து விட்டு 9வது உலக திரைப்பட விழா நடத்தப்படுகிறது. மேலும் தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தலைவர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் அமீர் விழாக்குழுவில் இருப்பதாகத் தவறான தகவல் அளித்து முதல்வரிடம் தமிழக அரசின் நிதியாக ரூபாய் 25 லட்சம் பெற்றிருக்கின்றனர்.

இத்தகைய செயல்களால் மிகவும் அதிருப்திக்கு உள்ளான தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் 9வது சென்னை உலகத் திரைப்பட விழாவினைப் புறக்கணிப்பதோடு இது போன்று தவறுகள் நடக்காமல் இருக்கத் தமிழக அரசையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

டிசம்பர் 14 ஆகிய இன்றைய தினம் மாலை 9 வது சென்னை உலகத் திரைப்பட விழா ஆரம்பிக்க இருக்கும் சூழ் நிலையில் அதனைப் புறக்கணிப்பது என்று தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் எடுத்திருக்கும் முடிவு 9வது உலகத் திரைப்பட விழாவில் எதிரொலிக்குமா என்பது அதன் ரசிகர்களின் கவலையாக உள்ளது.

-Vijay Anandh.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks