இலங்கைக்கெதிரான ஐ நா நடவடிக்கைக்கு ஆதரவு – மன்மோகன்சிங்

அமெரிக்கா கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்போவதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

இன்று லோக்சபாவில் இலங்கைத்தமிழர் படுகொலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்த பிரதமார், “ ஐக்கிய மனித உரிமை ஆணையம் கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்…. பாராளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளில் பங்கெடுத்துக் கொள்கிறோம்” என்று பேசினார்.

இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈழத்தமிழர் படுகொலை உலக அளவிலும் தமிழகத்திலும் பெருத்த அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆதரவு அளிக்கு மாறு இந்திய அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு வந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் இந்தியா எங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்கும் என்கிற ராஜ பக்‌ஷேயின் ஆணவப்போக்குக்கு மரண அடி விழுந்துள்ளது.

தொடர்ந்து மெளனம் சாதித்து வந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த அதிரடியான முடிவு உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.ஈழப்போர் முடிந்து 2 வருடங்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ஒலித்த தமிழர்களின் குரல் ,சமீபத்தில் சேனல் 4 ஒளிபரப்பிய நெஞ்சை உறைய வைக்கும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் ,அதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் மீதான நெருக்கடி, இந்திய பாராளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் மற்றும் நடு நிலை உறுப்பினர்களின் போராட்டங்கள் ஆகியன இலங்கை அரசாங்கத்திற்கெதிராக  இந்திய அரசை குரல் கொடுக்க வைத்திருக்கின்றன.

தொடர்ந்து இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் ஐ நா சபையில் எடுத்துச் செல்லப்பட்டு  இனப்படுகொலைக்குக் காரணமான ரஜபக்‌ஷேவும் அவருக்குத் துணை நின்றவர்களும் தண்டிக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

2 Comments

  1. வேடியப்பன் says:

    இனிப்பான தகவலை உடனடியாக தெரிவித்தமைக்கு நன்றி!

  2. Gopinath J says:

    Hon’ble PM has taken a wise decision. Otherwise, this would cause hatred among Tamil Community, who have already in aggressive mood, as the Central Government was co-sponsor of this Tamil Genocide in Sri Lanka.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks