பொழுது போக்கு ஆரம்பம்

திரைப்படங்கள் என்றாலோ அவை பொழுது போக்கிற்காகத்தான். திரைப்படத்தின் பெயரே “பொழுது போக்கு” என்றால் கேட்கவா வேண்டும், ரசிகர்கள், சினிமாவில் இதுவரை பார்த்து மகிழ்ந்திராத வடசென்னையின் கலகலப்பான வாழ்க்கையை திகட்ட திகட்டப் பதிவு செய்யப்போகும் படம் தான் பொழுது போக்கு.  இத்திரைப்படத்தின் துவக்க விழா சினிமா பாரம்பரியமிக்க AVM ஸ்டுடியோ பழைய பிள்ளையார் கோயிலில் இன்று நடந்தது.

“வடசென்னை என்றால் ரவுடியிசம், அராஜகம் என்கிற எண்ணத்தை மாற்றும் வகையில் அங்கு வாழும் நான்கு இளைஞர்களின் கலகலப்பான எதார்த்தமான வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக ‘பொழுதுபோக்கு’  இருக்கும். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, புதுமுக இயக்குநர் A.சரவணகுமார் இயக்குகிறார். K.S.கோபி கேமரா கையாள, இசையமைப்பாளர் ஹார்மோனி இசையமைக்கிறார். இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெறுகிறது. இரண்டு பாடல்கள் சென்னையிலும், மூன்று பாடல்கள் வெளிநாட்டிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் பொழுது போக்கின் தயாரிப்பாளர் S.சீனிவாசன்

இன்று படப்பிடிப்புன் துவங்கிய பொழுது போக்கு தொடர்ந்து சென்னை, வடசென்னை, தரமணி, புதுப்பேட்டை மற்றும் கோவா ஆகிய இடங்களில் வளரவ்யுள்ளது. 2012 தீபாவளிக்கு பொழுது போக்கு விருந்து படைக்கும் படமாக பொழுது போக்கு இருக்கும்

லிஜோ மூவிஸ் என்கிற தனது நிறுவனத்தின் சார்பாக S.சீனிவாசன் பொழுது போக்கு திரைப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

மக்கள் தொடர்பு செல்வரகு S.
[nggallery id=586]

Leave a Reply

Copyright © 2010 Mysixer.Com · All rights reserved