இன்ப அதிர்ச்சியில் பிரகாஷ்ராஜ்

இயக்குனர் வின்சென்ட்செல்வா இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘துள்ளி விளையாடு’. புதுமுகம் யுவராஜ் அறிமுகமாகும் இப்படத்தின் படப்பிடிப்பின் ஒரு கட்டம் கிழக்கு கடற்கரைச்சாலையில்  நடந்து வருகிறது. நேற்று  நடை பெற்ற படப்பிடிப்பின் போது அதில் நடிக்கும் பிரகாஷ் ராஜ் சம்பந்தப் பட்ட காட்சிகள் படமாக்க இருந்தன. அதற்காக துள்ளி விளையாடு படப்பிடிப்புத்தளத்திற்கு வந்த பிரகாஷ் ராஜுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.   நேற்று பிரகாஷ்ராஜின் பிறந்த நாளாகையால்  படக்குழுவினர் பிறந்த நாள் கேக் ஏற்பாடு செய்து இருந்தனர். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சியில் திளைக்க படக்குழுவினர் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாட கேக்கை வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் பிரகாஷ் ராஜ். இயக்குனர் உட்பட தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் தனது கையால் பிறந்த நாள் கேக் ஊட்டி தனக்கு இன்ப அதிர்ச்சி அளித்த படக்குழுவினர்களுக்கு இரட்டிப்பு இன்ப அதிர்ச்சி அளித்தார் நம்ம செல்லம்….

செல்லத்துக்கு பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துகளை www.mysixer.com தனது வாசகர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறது.

[nggallery id=596]

Leave a Reply

Copyright © 2010 Mysixer.Com · All rights reserved