இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன் எப்போ இந்த குறும்படத்தை எடுத்தாரு..? அப்படித்தான் நினைக்கத் தோன்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியல் படிக்கும் மாணவர் பிரணவ் ராஜ்குமார் இயக்கியிருக்கும் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் குறும்படத்தைப் பார்க்கும் போது.
Zero Budget அதாவது காசே இல்லாமல் இந்த 40 நிமிடக் குறும்படத்தை தயாரித்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே கதை எழுதி, நடித்து, ஒளிப்பதிவு செய்து, இசையமைத்து, இயக்கி என்று பிரணவும் அவரது நண்பர்களும் அவரவர்களுக்குள்ள துறைகளைப் பகிர்ந்து கொண்டு இந்த அழகான குறும்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவரான பிரணவ் கவிப்பேரரசின் வைர வரிகளாக புன்னகை மன்னன் படத்தில் வரும் ஏதேதோ
எண்ணம் வளர்த்தேன் பாடல் வரிகளையே தலைப்பாகவும் கருவாகவும் கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் இசையமைத்தும் இருக்கிறார்.
ஒவ்வொரு ஷாட்டிலும் நேர்த்தி தெரிகிறது. குறிப்பாக கதாநாயகன் ரமேஷின் நண்பனாக வரும் கார்த்திக் மற்றும் கதாநாயகி சந்து இருவரின் நடிப்பு மற்றும் முகபாவனைகளில் ஒரு யதார்த்தம் அதே நேரம் வசன உச்சரிப்புகளிலும் உடல்மொழிகளிலும் ஒரு ஸ்டைல் தெரிகிறது, அடடா… திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றும். நடன அசைவுகள், கேமரா கோணங்கள், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம் என்று 100% நேர்த்தியாகப் படம்பிடிக்கப் பட்டிருக்கிறது.
எதுக்கு வள வளவென்று விமர்சனம்? நீங்களே பார்த்து ரசியுங்கள்.
-Vijay Anandh.K




