வா மச்சா வா – இது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு

IPL 5 கிரிக்கெட் ஆட்டங்களுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. அதுவும் முதல் போட்டியில் சென்ற முறை ஐபிஎல் கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை ஊக்கப்படுத்தும் விதமாக கணேஷ், கார்த்திக், இம்தியாஸ், முருகன், விஜில் மற்றும் விஎஸ் பரன் ஆகிய நண்பர்கள் சேர்ந்து வா மச்சா வா என்னும் ஆல்பத்தைத் தயாரித்துள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை சியர் அப் செய்ய கணேஷ் மற்றும் கார்த்திக் பாடல் எழுத, இம்தியாஸ், கார்த்திக்,முருகன் மற்றும் விஜில் பாட, வி எஸ் பரன் கீ போர்டு வாசிக்க உருவான வா மச்சா வா ஆல்பம் மேடையில் இசைத்துக் காண்பிக்கப் பட்டதென்றால் பிக் எஃப் எம் ஆர் ஜே இம்சை அரசி ஒபிலியா வா மச்சா வா ஆல்பம் தயாரித்தவர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை சியர் அப் அதாவது உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

அதன் வெளியீட்டு விழா இன்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸின் ரிப்ளிகா என்று சொல்லும் அளவுக்குக் 20-20 யில் சக்கைப் போடு போடும் விஷால் தலைமையிலான சென்னை ரினோஸ் அணி வா மச்சா வா ஆல்பத்தை வெளியிட்டது. இன்று முதல் வா மச்சா வா வை யூடியூபிலும் ஃபேஸ்புக்கிலும் கேட்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ சியர் அப் பண்ணுவதை விட வேறு என்ன வேலை?

va-macha-va-ipl-track-release-15

Picture 11 of 15

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks

online pharmacies +|- brand viagra online pharmacies / testosterone anadoil