புதுப்பொலிவு பெறும் இயக்குனர்கள் சங்க இணையம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க இணையதளம் www.tantis.in பல்வேறு புதிய தகவல்களுடன் புதுப்பொலிவு பெறுகிறது.

தமிழ் நாடு திரைப்பட   இயக்குனர்கள் சங்கத்தின்  www.tantis.in என்கிற இணையதளத்தை தமிழ் நாடு இயக்குனர்கள் – இணை-துணை- உதவி இயக்குனர்கள் ஆகியோரைப் பற்றிய குறிப்புகளுடன் அவர்களது சாதனைகள் போன்றவை இடம்பெறும். சங்க நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் உடனுக்குடன் வெளியிட ப் படும்.

மேலும் திரைப்படத் தொழில் குறித்த மாநில, இந்திய அரசு சட்ட குறிப்புகள், ஒப்பந்தங்களின் மாதிரிகள் ஆகியவை இடம்பெறும். சர்வதேசப் படவிழாக்களுக்குத் திரைப்படங்களை அனுப்புவதற்கான விதிமுறைகளும் இந்த இணையதளத்தில் இடம்பெறும். இதன் மூலம் உறுப்பினர்கள் தேவையான தகவல்களைப் பெற முடியும்.

சங்க உறுப்பினர்களால் இயக்கப்படும் படங்களை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு இணைய ஒளிபரப்பு சேவையினை 24 மணி நேரமும் இயங்கும் Live TV இல் வழங்க இருக்கிறார்கள். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் தங்களது படங்களை ரசிகர்கள் மத்தியில் விளம்பரப்படுத்த முடியும்.

இந்த சேவையில் பிரபலங்களின் உரையாடல்கள், படவிழாக்கள், கலந்துரையாடல்கள் போன்றவையும் இடம்பெறும்.

இந்த இணைய ஒளிபரப்பினை பொதுச்செயலாளர் அமீர், பொருளாளர் ஜன நாதன், இயக்குனர்கள் பாலசேகரன், ஜெகன் நாத், விதயாசாகர், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இயக்குனர் பாலாஜி சக்தி வேல் துவக்கி வைத்தார். மூத்த பத்திரிக்கையாளர் தேவராஜ் உடனிருந்தார்.

இணைய ஒளிபரப்பின் துவக்கமாக வரும் 20 ஆம் தேதி பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படத்தின் டிரையலர் ஒளிபரப்பப்படும்.

புதுப்பொலிவு பெறப்போகும் www.tantis.in க்காக 5 பேர் கொண்ட வல்லுனர்கள் குழு தீவிரமாக பணியாற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய காலகட்டத்திற்கேற்ப தமிழ் நாடு இயக்குனர் சங்கம் எடுத்திருக்கும் இந்தப் புதிய முயற்சியினை திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளனர்.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks

online pharmacies +|- brand viagra online pharmacies / testosterone anadoil