ஸ்ரீதர் -விமர்சனம்

நட்பு என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு கசமுசா போன்ற சமாச்சாரங்களில் ஈடுபடும் இன்றை தலைமுறைக்கு ஒரு உயர்ந்த நட்பினை அடையாளம் காட்டும் படம்தான் ஸ்ரீதர்.

படக்குழுவினருக்கு படத்தின் தலைப்பினை வைக்கும் போதே மிகப்பெரிய தைரியம் இருந்திருக்க வேண்டும். மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் ஒரு மிகச் சிறந்த இயக்குனர். தனது வாழ் நாளில் கிளாசிக் படங்களைத் தவிர வேறெதுவும் கொடுத்தறியாதவர். சித்தார்த்-ஸ்ருதிஹாசன் – ஹன்சிகா மோட்வானி – நவ்தீப் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஸ்ரீதர் நிச்சயம் அவருக்கு சமர்ப்பணம் செய்யுமளவுக்கு மற்றுமொரு கிளாசிக் படம்தான்.

ஹீரோவுடன் சந்தானம் காம்பினேஷன் இல்லாமல், துரத்தி துரத்தி சண்டை போடும் காட்சிகள் இல்லாமல் சுவராஸ்யமான ஒரு முழு நீளப் படத்தைத் தரமுடியும் என்று காதலில் சொதப்புவது எப்படி?, ஸ்ரீதர் என்று அடுத்தடுத்துக் கிளாசிக் படங்களைக்கொடுத்து நிரூபித்திருக்கிறார் சித்தார்த்.

ஒரு இயல்பான நடிகராக ஏற்றுக் கொள்ளும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதில் 100% தன்னுடைய ஈடுபாட்டைக் காண்பித்து அந்தக் கதாபாத்திரமாகவே வாழும் கலை தெரிந்த வெகு சில நடிகர்களுள் சித்தார்த்தும் ஒருவர். மிகச்சிறந்த இசைக்கலைஞனாக வரவேண்டும் என்பதற்காகப் படிப்பிற்கேற்ற வேலை தேடாமால் அப்பாவிடம் திட்டு வாங்கும் இடங்களிலாகட்டும், தன்னுடைய பள்ளித்தோழி ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகளாகட்டும், ஹன்சிகா மோட்வானியைச் சந்தித்தவுடன் காதல் வயப்படுவது இப்படி ஒவ்வொரு இடங்களிலும் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஸ்ரீதராகவே நினைக்க வைத்து விடுகிறார். குறிப்பாக ஸ்ருதிஹாசனின் வருங்கால மாப்பிள்ளை நவ்தீப் வருகையை ஒட்டி நடக்கும் காட்சிகளில் சித்தார்த்தின் முகபாவனைகள் படு யதார்த்தம் – அந்த ஐ ஃபோன் காட்சியில் மிகவும் அற்புதம்.

ஒரு தொழில் முறை கிதாரிஸ்ட் போன்று படம் முழுவதும் அவர் வெளிக்கொணர்ந்திருக்கும் உணர்வுகள் அபாராம்.

ஸ்ருதிஹாசனும் சற்றும் சளைத்தவரல்ல. சித்தார்த்துக்காக அவருடன் சேர்ந்து கொண்டு அவரது காதலி ஹன்சிகா மோட்வானியை தேடுவதாக வரும் பாடலில் அவர் ஆடும் ஆட்டத்தில் கமல்ஹாசனின் – காசு மேல காசு வந்து… ஆடலைப்போன்ற உடல்மொழிகளை நினைவு படுத்துகிறார்.

ஸ்ரீதரின் முன்னேற்றமே தனது கடமை என்று எடுத்துக் கொண்டு அவருக்குப் பக்கபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது அம்மாவே ஸ்ரீதரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லும் போது துடிதுடித்துப் போகிறார். நிச்சயமாக ஸ்ரீதருடன் சேர்த்துத் தமிழில் வெளியான மூன்று படங்களிலும் வெவ்வேறு உச்சங்களைத் தொடுகிறார்.

நவ்தீப் – செம பாடி லாங்குவேஜ்…மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். அவரை ஏன் தமிழ் சினிமா உலகம் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது ஆச்சிர்யம்தான்.

ஹன்சிகா மோட்வானி, குழந்தைத்தனமான குணாதியங்களுடன் வந்து மனதைக் கவர்கிறார். ஹன்சிகா மோட்வானி உங்கூட சேர்ந்தா நானே மாறிடுவேன் போல… என்கிற போது… ஆமா நீ… நீயாவே மாறிடுவே என்று சித்தார்த் பேசும் வசனம் சூப்பர்ப். தொடர்ந்து இறுதிக் காட்சிகளில் சித்தார்த்-ஹன்சிகா மோட்வானி-ஸ்ருதிஹாசன்- நவ்தீப்- சித்தார்த் குடும்பத்தினர் இவர்களுக்கும் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்களில் வசனங்கள் அனைத்தும் பட்டை தீட்டிய வைரங்களாய் ஜொலிக்கின்றன.

சித்தார்த், “எல்லாவற்றையும் தோழியுடன் ஷேர் செய்து கொள்ள முடியும் படுக்கையைத் தவிர…” நவ்தீப், “என் பையனுக்கு உன் அம்மாவுக்கு இப்படி ஒரு நண்பர் இருந்தார் என்பதை நான் சொல்ல வேண்டும்..” என்பது போன்ற வசனங்கள் மிகவும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

படத்தில் சித்தார்த்துக்குச் சமமாக சிவ கார்த்திகேயன் நடித்திருக்கிறார்… அட என்னடா அவரைப் படத்துலயே பார்க்க முடியவில்லை ஆனால் சித்தார்த்துக்குச் சமமா நடித்திருக்கிறார் என்று நீங்கள் கேட்டால் அதுதான் அவரது வெற்றி… சித்தார்த்துக்காகப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். ஸ்ரீதர் பார்த்த பிறகு மற்றுமொரு கிளாசிக் படமான சிப்பிக்குள் முத்துவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கமலுக்குப் பின்னணிக்குரல் கொடுத்தது ஞாபகம் வருகிறது.

எல்லாம் சரிதான் தனக்கு நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையை வெறுப்பேற்றுவதற்காகவே தன் நண்பருக்கும் தனக்கும் இடையிலான நெருக்கத்தை வெளிப்படுத்துவது,அதனைத் தொடர்ந்து அந்த மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்துவது…அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என்று பார்த்த காட்சிகள் போன்றே இருப்பது ஒரு சறுக்கலே. ஆனால் வசனங்கள் மிகவும் கவனமாக எழுதியிருப்பதால் அந்த சறுக்கலால் பெரிதாக அடிகள் எதும் படவில்லை.

சரி மொத்ததில் படம் எப்படி..?

மறுபடியும் முதல் பத்தி(Paragraph)யை மட்டும் படியுங்கள்.

-விஜய் ஆனந்த்.K

1 Comment

  1. Mala says:

    vimarsanathai patri vimarsanam seiya naan innum padam paarkavillai….Actually Siddharth “Kaa.so.yep.”la nallaa pannirundhar…casualana acting… Let me continue after see “Sridhar”..

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks