கெளதம் மேனன் படங்கள் என்றாலே இசைக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஏ ஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என்று மிகப்பெரிய ஜாம்பவான்களை தனது படங்களுக்கு இசையமைக்க வைத்த கெளதம் வாசுதேவ மேனன் ஜாம்பவான்களுக்கு எல்லாம் ஜாம்பவான் என்று அறியப்படும் இசைஞானி இளையராஜாவுடன் முதல் முறையாகக் கை கோர்த்திருக்கிறார். ஜீவா,சமந்தா நடிக்கும் நீ தானே என் பொன்வசந்தம் படத்திற்காக அற்புதமான 8 பாடல்களை வழங்கியிருக்கிறார் இசைஞானி. விரைவில் பாடல்கள் வெளியிடப்படும் நிலையில் முன்னோட்டமாக இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் ஆடியொ டீசர் இதோ உங்களுக்காக…




