கோவையின் புதியவரவு ஸ்ரீபாலம் சில்க் சாரீஸ் ஆடையகத்தை நடிகை பார்வதி ஓமனகுட்டன் திறந்து வைத்தார். சென்னையின் பட்டுப் பாரம்பரியங்களில் மிக முக்கியமானது நல்லி. இதன் நிறுவனர் நல்லி குப்புசாமி செட்டியின் மகள் ஜெயஸ்ரீரவியால் துவக்கப்பட்டு சென்னையில் வெற்றிநடை போட்டு வரும் அதிநவீன பட்டு ஜவுளி நிறுவனம் ஸ்ரீ பாலம் சில்க்ஸ். சென்னை தியாகராயர் நகரில் பாண்டி பஜார், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர் ஆகிய மூன்று இடங்களில் ஸ்ரீபாலம் சில்க்ஸ் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் வெற்றி மகுடத்தில் மற்றொரு மைல்கல்லாக, இதுவரை சென்னையில் பட்டுத்துறையில் சேவையாற்றி வந்த ஸ்ரீபாலம் சில்க்ஸ் தற்போது கோவையில் தனது முதலாவது கிளையை துவக்க உள்ளது. கோவை காந்திபுரத்தில் கிராஸ் கட் சாலையில் லஷ்மி மணியன் மெட்ரோ கதவு எண் 497-500 என்ற முகவரியில் ஸ்ரீபாலம் சில்க்ஸ் துவக்கப்பட்டுள்ளது.
ஜுன் 7-ந் தேதியன்று நடைபெற்ற கோலாகல விழாவில் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் தலைமையில், உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறி தற்போது பில்லா -2 படத்தில் நடித்து வரும் நடிகை பார்வதி ஓமனகுட்டன், கோவை ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனத்தின் ஜெயஸ்ரீரவி, கடந்த 3 வருடங்களாக கோவை – திருப்பூர் நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பட்டுப் புடவை எடுப்பதற்காக ஒவ்வொரு முறையும் சென்னை வந்து செல்ல வேண்டி இருப்பது பற்றி தம்மிடம் தெரிவித்ததாக கூறினார். இதனால் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாட்டின் 2-வது பெரிய நகரமான கோவையில் ஸ்ரீபாலம் சில்க்சை துவக்குவதில் பெருமிதம் கொள்வதாக ஜெயஸ்ரீ ரவி தெரிவித்தார். சென்னையில் முதன்முறையாக பாலம் சில்க்ஸ் நிறுவனத்தை துவக்கிய பிறகு 5 ஆண்டுகள் இடைவெளியில் அடுத்த கிளையை துவக்கியதை நினைவு கூர்ந்த ஜெயஸ்ரீரவி, கடந்த 12 மாதங்களில் அடுத்தடுத்து 2 கிளைகளை துவக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். கோவை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பலவண்ண, பலவித பட்டுச் சேலைகள் ஸ்ரீபாலம் சில்க்சில் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக ஜெயஸ்ரீ ரவி குறிப்பிட்டார்.
Enjoy more photos on http://www.mysixer.com/?p=17828
ஒவ்வொரு கிளை திறக்கப்படும் போதும் புதுரக பட்டுச் சேலையை அறிமுகப்படுத்துவது ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனத்தின் பழக்கம். அந்த வகையில், கோவையில் துவக்கப்பட்டுள்ள கிளைக்காக அல்ட்ரா லைட் ப்யூசன் சில்க் என்ற புதிய ரக பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தி உள்ளார் ஜெயஸ்ரீரவி. அதாவது முந்தானை முழுக்க முழுக்க பட்டு நிரம்பியிருக்க, உடல்பகுதியில் சில்க் காட்டன் இருப்பது இதன் தனிச்சிறப்பு. பட்டு என்றாலே அதிக கனம் கொண்டது, பராமரிப்பது சிரமம் என்ற பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அல்ட்ரா லைட் ப்யூசன் சில்க் எடைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தரக சேலையை வாங்க பெண்கள் மத்தியில் இப்போது ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் ஜெயஸ்ரீரவி கூறினார்.
கடை திறப்புவிழாவின் போது ஸ்ரீபாலம் சில்க்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள அல்ட்ரா லைட் ப்யூசன் சில்க்ஸ் பட்டுப்புடவையை அணிந்தபடி
மாடல் மங்கைகள் மேடையில் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஸ்ரீபாலம் சில்க்சின் தனிச்சிறப்புகளில் ஒன்று சில்க்லைன் என்ற பெயரில் ஆண்டுதோறும், பட்டுச்சேலைகளுக்காகவே, பேஷன் ஷோ ஒன்றை நடத்துவது ஆகும். இந்த ஆண்டு அந்த பேஷன் ஷோவில், கோவை ஸ்ரீபாலம் சில்க்சின் நவீனரக பட்டுக்கள் அலங்கரிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதுமட்டுமின்றி முகூர்த்தப்பட்டு, டிசைனர் பட்டு, நவீன சேலைகள் என ஸ்ரீபாலம் சில்க்சில் திரும்பிய திசையெல்லாம் புதிய புதிய பட்டுப் புடவைகளின் அணிவகுப்பு தான். மேலும் கான்செப்ட் பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்திய பெருமையும் ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனத்தையே சேரும். அந்த வகையில், சென்னை கிளைகளில் உள்ள கான்செப்ட் ரக பட்டுப் புடவைகளும் கோவை பாலம் சில்க்சில் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஸ்ரீபாலம் சில்க்ஸ் குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.palamsilk.com




