நான் போக்குவரத்து விதிகளை மதிக்கிறேன், நீங்கள்?

சாலை விதிமுறைகளை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு நடைபயணம்

இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங்ஆட்ஸ் இணைந்து நடத்தும் மோட்டோ ஷோ நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரை (Beach) ஒட்டிய சாலையில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் I FOLLOW RULES Y DON’T U என்ற வாசகம் அடங்கிய மேல்சட்டை அணிந்தும் பதாகைகளை ஏந்தியும் நடை பயணம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீமன், மருத்துவர் சி.எம்.கெ.ரெட்டி, மற்றும் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஜெ செல்வகுமார் தலைக்கவசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துகொண்டார்.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks