மனங்கவர்ந்த கதாநாயகன் – வில்லன் அஜித்குமார்

திரைப்பட  விருதுகள் வரலாற்றில் இது நிச்சயம் ஒரு புது அனுபவம் தான். ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகன் அவரே சிறந்த வில்லன், என்ன ஒரு முரண்பாடான இரண்டு விருதுகள்.

6வது விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் தான் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. இந்த முரண்பாடான இரண்டு விருதுகளையும் வென்றிருப்பவர் நிஜ வாழ்க்கையில் யாருடனும் முரண்படாத  நடிகர் அஜித்குமார் தான்.

தவிர்க்க முடியாத காரணங்களால் விருது வழங்கும் விழாவில் கலந்த கொள்ள முடியாத அஜித்குமாருக்கு இரண்டு விஜய் விருதுகளையும் விஜய் தொலைகாட்சித்தலைவர் ஸ்ரீராம், நிகழ்ச்சியாக்கத் தலைவர் பிரதீப் மில்ராய் மற்றும் தொலைக்காட்சித் துணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் நேரடியாகச் சென்று வழங்கினார்கள்.

விருதுகளைப்பெற்றுக் கொண்ட அஜித்குமார், “ஃபேவரைட் ஸ்டாராகவும் சிறந்த வில்லனாகவும் என்னைத் தேர்ந்தெடுத்த அத்துனை ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி…” என்று கூறினார்.

-Vijay Anandh.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks