சூர்யா,சிங்கம் – 2க்குப் பிறகு துப்பறியும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இயக்குனர் கெளதம் வாசுதேவமேனன் போட்டான் கத்தாஸ் நிறுவனத்தில் அவர் இயக்கும் துப்பறியும் ஆனந்தன் என்ற படத்தில் நடிக்க கையெழுத்திட்டிருக்கிறார். விஜயின் யோகனுக்குப் பிறகு கெளதம் வாசுதேவமேனன் இயக்கும் படமாக துப்பறியும் ஆனந்தன் இருக்கும்.
இதைப்பற்றி நடிகர் சூர்யா கூறும்போது, “கெளதம் மற்றும் நான் இணைந்தாலே படத்தில் ரொமான்ஸ், சிறப்பான பாடல்கள் மற்றும் அட்டகாசமான ஆக்ஷன் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். துப்பறியும் ஆனந்தனில் அவர்கள் எதிர்பார்க்கும் அத்துனையும் இருக்கும், அதைவிட அதிகமாக இதுவரை பார்த்திராத ஒரு ஸ்டைலான படமாகவும் இருக்கும்..”
கெளதம் வாசுதேவ மேனன், “மறுபடியும் சூர்யாவுடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நவீன கால சாகசங்களுடன் அமைந்த ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய ஒரு குறிப்பிட்ட காலகட்டப் (Period) படமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக் காண்பிப்பதற்காக கடைபிடிக்கப்படும் அத்துனை சூத்திரங்களையும் தகர்த்தெறிவான் துப்பறியும் ஆனந்தன்.” என்றார்.
2013 தொடங்கும் போது துப்பறியும் ஆனந்தன் படப்பிடிப்பினையும் ஆரம்ப்பிக்கத் திட்டமிட்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
-விஜய் ஆனந்த்.K




