தொழிலாளிகள் தலைவரான படைப்பாளி

ஃபெஃப்சி தலைவராக இயக்குனர் அமீர் வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்த்திரைப்படத்துறையில் தயாரிப்பாளர் சங்கத்தில் உட்பூசல் பிரச்சினை, ஃபெஃப்சி தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை ஆகியவை நிலவி வந்தது.

தொழிலாளர் சம்பளப் பிரச்சினையில் ஆரம்பம் முதலே இயக்குனர் அமீர் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நியாயமான ஊதியம் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்து வந்தார். இதனால் தயாரிப்பாளர்களின் அதிருப்திக்குக் கூட ஆளானார். இந்த நிலையில் நேற்று 19,ஜூன் அன்று ஃபெஃப்சித் தலைவர் தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலில் இயக்குனர் அமீர் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இயக்குனர் அமீர் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தைப்பெற்றுத் தருவார் என்கிற அதேவேளையில் அவரும் ஒரு சிறந்த படைப்பாளியாகத் திகழ்ந்து கொண்டிருப்பதால் படைப்பாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டுத் தமிழ்த்திரைப்பட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார் என்று தொழிலாளர்களும் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

இயக்குனர் அமீர் தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விஜய் ஆனந்த்.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks