லட்சுமி ராமகிருஷ்ணன் 100 படங்கள் இயக்க வேண்டும்
- இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
உயிரோட்டமுள்ள படத்தை இயக்கியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்
- இயக்குனர் சேது மாதவன்
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன்வெளியிட இருக்கும், ஏவிஏ புரொடக்ஷன்ஸ் – மங்கி கிரியேட்டிவ் லேப் இணைந்து தயாரித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ஆரோகணம் படத்தின் பாடல்கள் வெளியீடு இன்று நடைபெற்றது. விழாவிற்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மற்றும் மூத்த இயக்குனர் சேது மாதவன் தலைமை ஏற்றனர்.
மிகச்சிறந்த படைப்பாளிகளுள் ஒருவரான இயக்குனர் சேது மாதவனை ஆரோகணம் பாடல் வெளியீட்டு விழாவில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தனக்கும் அவருக்கும் உள்ள நீண்டகாலப் பிணைப்பையும் நினைவு கூர்ந்து பேசிவிட்டுத் தொடர்ந்து ஆரோகணம் படத்தைப் பற்றி பேசும் போது, “20 வருடங்களுக்கு முன் எனது படமான அக்னிசாட்சியில் சரிதா செய்தது பைபோலார் டிசார்டர் என்பதே எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. பல்வேறு தரப்பினர் மத்தியில் பரவாலக் காணப்பட்டாலும் பைபோலார் டிசார்டர் என்பது அரசியல் வாதிகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது…(அரங்கில் சிரிப்பலை) இன்றைய இயக்குனர்களுக்கு தகவல்கள் எளிதாக இணையத்தளத்தில் கிடைத்து விடுகின்றன. அந்த வகையில் அறிமுக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் அதனை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கதை-திரைக்கதை அமைத்துக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.
ஆரோகணம் ஒரு சிறிய முழு நீளத்திரைப்படம். தமிழ்த்திரைப்படம் இன்று உலக சினிமாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் நமது சினிமாவைப் பற்றி தான் பேசுகிறார்கள். இந்த நிலையை நாம் தக்க வைத்துக் கொண்டு மென்மேலும் செல்ல வேண்டும். ஒரு போதும் பின்னால் சென்று விடக்கூடாது. அந்த வகையில் ஒரு அனுபவ இயக்குனர் போன்று மிகச்சிறந்த படமாக ஆரோகணத்தை இயக்கியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். மிகக்குறுகிய காலத்தில் திட்டமிட்ட செயல்படுவதில் இன்றைய இளைஞர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனுன் அதற்கு விதிவிலக்கல்ல. மிகக்குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு நேர்த்தியான படம் எடுத்திருக்கும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் எனக்குள்ளும் இது போன்ற படங்களை எடுக்கும் ஆவலை விதைதிருக்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணான் நூறு படங்களை இயக்க வேண்டும்… நான் அப்போது இருக்க மாட்டேன், ஆனால் நிச்சயம் அவர் நூறு படங்களை இயக்குவார்” என்றார்.
இசையையைப் பற்றிக் குறிப்பிட்ட இயக்குனர் சிகரம், “ நானும் தப்புத்தாளங்கள் என்று ஒரு படம் இயக்கியிருக்கிறேன்… எனது திரைப்படங்களில் தப்பு செய்பவர்களைத் தான் அதிகமாகக் காட்டியிருக்கிறேன்… அந்த வகையில் தப்பு – தப்பாட்டம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்துவிடுகிறது… பாடல் வரிகளில் வரும் வந்தாச்சு தப்பாட்டம் அருமை… படம் பிடிக்கப் பட்ட விதமும் அருமை…” என்றார்.
படத்தில் முக்கியக் கதாபாத்திரமேற்று நடித்திருக்கும் விஜி சந்திரசேகரைப் பற்றிப் பேசும் போது, “ இப்பொழுது வரை அவரை நான் சரிதா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்… தில்லுமுல்லுவில் ரோலர் ஸ்கேட்டிங் செய்து கொண்டு வருவார் மிகவும் சிரமப்பட்டு அந்தக் காட்சிகளில் சிறப்பாக நடித்தார்… ஆரோகணம் படத்தில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும்” என்று வாழ்த்தினார்.
முன்னதாக வாழ்த்திப் பேசிய இயக்குனர் சேது மாதவன், “தமிப்படங்களென்றாலே அலங்காரம் -Decoration , பாடல்கள் -Songs ,ஆட்டம்
-Dance என்று இருக்குமே நீயும் அதைத்தான் செய்யப்போகிறாயா என்று கேட்டேன்… சினிமாவில் ஒரு உயிரோட்டம் இருக்க வேண்டும் அதற்கென்று ஒரு ஆன்மா இருந்து சுவாசிக்க வேண்டும்… அப்படிப்பட்ட உயிரோட்டமுள்ள ஒரு படமாக ஆரோகணத்தை இயக்கியிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் எல்லா வளங்களையும் பெற வாழ்த்துகள்..” என்றார்
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி கே இசையமைத்திருக்கும் ஆரோகணத்தின் பாடல்களை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரும் மூத்த இயக்குனர் சேதுமாதவனும் இணைந்து வெளியிட இன்றைய இயக்குனர்கள் மிஷ்கின், அறிவழகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
Enjoy the photo gallery at http://www.mysixer.com/?p=18053
விழாவில் மூத்த நடிகைகள் சச்சு, வடிவுக்கரசி, இயக்குனர்கள் வசந்த், பாண்டிராஜ், நடிகர் ஸ்ரீகாந்த், தலைவாசல் விஜய், UTV தனஞ்செயன், பாடகி சின்மயி தயாரிப்பாளர் டி சிவா ஆகியோர் கலந்து கொண்டு ஆரோகணம் படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
-Vijay Anandh.K




