மரணத்திற்குப் பின்னும் வாழும் மதன்குமார்

விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் இதழில் லே அவுட் ஆர்டிஸ்ட் ஆக மதுராந்தகத்தை சேர்ந்த த.மதன் குமார் (வயது 25) பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 24) ஓ.எம்.ஆர் சாலையில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன்குமாருக்கு திங்கள் (ஜூன் 25)இரவு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மதன்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

இளம் பத்திரிகையாளர் மதன் குமாரின் கண்கள், இதயம், சிறுநீரகம், நுரையீரல்,கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு,இவை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.

இறந்தும் மற்றவர்களுக்கு வாழ்வு அளித்து பல உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் மதன்குமார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விகடன் குழுமத்துடன் இணைந்து www.mysixer.com தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

-விஜய் ஆனந்த்.K

News Source: FB of  Vikatan EMagazine

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks