கெளதம் வாசுதேவ மேனனின் 3வது இரட்டைக் குழந்தை

இயக்குனர் கெளதம்மேனன் பங்குதாரராக இருக்கும் போட்டான் கதாஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து இரு மொழி படங்களை தயாரித்து வருகிறது. இசை ஞானி இளையராஜா இசையில் உருவாகும் “நீதானே என் பொன்வசந்தம்” தெலுங்கில் “எட்டோ வெல்லி போயிந்தே மனசு” என்ற பெயரில் தயாராவதும் தெரிந்ததே. தமிழில் பெரும் வெற்றி பெற்ற “விண்ணை தாண்டி வருவாயா” தெலுங்கில்  “ஏய் மாயா சேசாவே” என்ற பெயரில் மாபெரும் வெற்றி பெற்றததும் அறிந்ததே.

இதன் தொடர்ச்சியாக இப்போது இயக்குனர் பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம் சாய் இயக்கும் புதிய படம் “தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்”. இதே படம் தெலுங்கில் “Courier boy Kalyaan” என்ற பெயரிலும் தாயராகிறது.

இப்படத்தின் மையக் கரு எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, மொழியையோ சார்ந்தது அல்ல, ஒரு நல்ல ஜனரஞ்சகமான நகைச்சுவை, காதல், ஆக்ஷன், என்ற கலவையுடன் பின்னபட்ட திரைக்கதையுடன் கூடியதாகும். “இக்கதையை நான் கேட்ட போது பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமப்பட்டேன்” என்கிறார் கெளதம்மேனன்.

ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ், நடிக்க உள்ள தமிழ் படம். தெலுங்கில் “இஷ்க்” என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்த நிதின் கதாநாயகராக நடிக்க அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளார் ராஜேஷ். காக்க காக்க, வாரணம் ஆயிரம்(அஞ்சல அஞ்சல) விண்ணைதாண்டி வருவாயா பாடல்களை பாடிய பிரபல பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களுக்கு ஹைதராபாத்  நகரில் தொடர்ந்து நடைபெறும் என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

தலைப்பு கெளதம் மேனனின் 3வது இரட்டைக் குழந்தை என்று இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா..? படைப்பாளிகளுக்கு அவர்களின் படைப்புகளும் குழந்தைகள் தானே! என்ன அவற்றை தமிழ்-தெலுங்கு என இருமொழி பேசும் இரட்டைக் குழந்தைகள் என்று கூட அழைக்கலாம்.

-விஜய் ஆனந்த்.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks