சென்னை வடபழனியில் உள்ள கமலா சினிமாஸ் திரையரங்கத்தில் முழுமையான டிஜிட்டல் தன்மையில் திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் வகையில் டிஜிட்டல் சினிமாவுக்கு ஏற்ற டிசிஐ புரெஜக்ஷன் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.மேலும் 3டி படங்களை துல்லியமாக பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற வகையில் 3டி புரெஜக்ஷன் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. இதனை பெப்சி தலைவர் – இயக்குனர் அமீர் துவக்கி வைத்தார்
ஹாலிவுட்டில் உள்ள மூன்று முன்னணி ஸ்டுடியோக்கள் இணைந்து டிஜிட்டல் சினிமாவுக்காக உருவாக்கியுள்ள தர நிர்ணயமே டிசிஐ என்று குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக படச்சுருளை கொண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட போது எல்லா படங்களும் ஒரே முறையில் திரையிடப்பட்டன. ஆனால் டிஜிட்டல் சினிமா வருகைக்கு பின் திரைப்படங்களை திரையிட பல் வேறு வழிகளும், பல்வேறு வகையான துல்லியமும் வேறுபட்ட புரெஜக்டர்களும் பயன்படுத்தப்
படுகின்றன.
இதனால் ஏற்படும் குழப்பத்தை தீர்க்கும் வகையில் டிசிஐ முறை உருவாக்கப்பட்டுள்ளது. டிசிஐ முறையில் திரைப்படங்கள் 2கே துல்லியத்தில் அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்படும் பார்கோ புரெஜக்டர்கள் மற்றும் சர்வர்களை கொண்டு திரையிடப்படுகின்றன.
மேலும் திரையயும் 3டி படங்களுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த தர நிர்ணயத்தை கடைபிடிக்க வேண்டியிருப்பதோடு திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் திரையரங்குகளை இதற்கு ஏற்ப மேம்படுத்தி கொள்ள வேண்டியிருக்கிறது.
Enjoy more photos of the event at http://www.mysixer.com/?p=18214
கமலா சினிமாஸ் திரையரங்கில் டிசிஐ முறையிலான புரெஜக்ஷன் அமைக்கப்பட்டிருப்பதோடு நவீனமயமான 3டி புரெஜக்ஷன் வசதியும் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் 3டி படங்களை துல்லியமாக கண்டு களிக்கலாம்.
கமலா சினிமாசில் இந்த வசதியை பெப்சி தலைவர் அமீர் துவக்கி வைத்தார். கமலா சினிமாசின் இயக்குனர் வள்ளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




