தமிழ் சினிமா ரசிகர்கள், தங்கள் “ஹீரோ” ஒல்லிக்குச்சி மாதிரி இருந்தாலும் பத்து பதினைஞ்சு டைனசர்ங்களைத் (Dinosaurs) தன் சுண்டு விரலிலேயே பந்தாடுவதைக் கூட ஏற்றுக்கொள்வார்களே தவிர, தங்கள் “ஹீரோ” செத்த பாம்பை அதாவது பலவீனமான ஒரு வில்லனை அடிப்பதை எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ் சினிமாவை, தங்கள் உழைப்பை மட்டுமே நம்பும் சுறுசுறுப்பான எறும்புகள் போன்ற படைப்பாளிகள் பெருத்த சிரமப்பட்டு சிகரத்திற்கு ஏற்றிக் கொண்டிருக்கும் போது சர்வ வல்லமை பொருந்திய யானை போன்றிருக்கும் சிலர் அசால்ட்டாக அடித்து அதள பாதாளத்திற்குத் தள்ளின மாதிரி இருக்கிறது, சகுனி.
அரதப்பழசான கதை, அதைவிடப் பழசான காட்சிகள். சந்தானமும் இல்லையென்றால் சகுனி, சட்னியாகியிருக்கும். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
-Vijay Anandh.K




