பில்லா 2 டிரையலர் வெளியீட்டில் தாமதம்

இன்றைய தேதியில் தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் பில்லா 2. எப்படி பில்லா உருவாகிறார் என்று முந்தின காலகட்டத்தைச் சொல்லும் படமாக இயக்குனர் சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் அஜித்  நடிக்க விரைவில் வெளியாக உள்ளது பில்லா 2.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அஜித், பல காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அவருடைய ஸ்டைலிஷான நடிப்பினைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்காக வெளியிடப்படுவதாக இருந்த பில்லா 2இன் டிரையலர் குறிப்பிட்ட நாளில் வெளியாவது தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான முறையான அறிவிப்புகள் வரும், தொடர்ந்து பில்லா 2உம் வெளியாக இருக்கிறது.

-விஜய் ஆனந்த்.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks