சமீபத்தில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மதுவிருந்தில் ஒரு நடிகர் அடிபட்ட விவகாரத்தில் நடிகை டாப்சி தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்று தாம் கர்னூலில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் மதுவிருந்தில் தாம் இருந்ததாகச் சொல்வது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் மோகன் பாபு அங்கிள் (Uncle) டாப்சியை அவரது இளைய மகளைப் போல் பார்த்துக் கொள்வதாகவும் அவரது மகள் லட்சுமி, மகன்கள் மனோஜ் மற்றும் விஷ்ணு தங்களது இளையசகோதரி போல் தம்மைக் கருதுவதாகவும், பல இக்கட்டான தருணங்களில் இருந்து மனோஜ் தான் தம்மைக் காத்து வருவதாகவும், சிலர் அவர்களது மலிவான விளம்பரத்திற்காக தம் பெயரைத் தேவை இல்லாமல் இழுப்பதாகவும் கூறியிருக்கிறார்.
“ஏற்கனவே இது போன்ற பிரச்சினைகள் எழும் போது நான் அமைதியாக இருந்துவிட்டேன்..ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது… நான் மனோஜுடனோ அல்லது எவருடனோ எந்த விதமான உறவுகளிலும் (Relationship) இல்லை.. நடிகர் மகத்துக்கும் எனக்கும் இடையில் எதுவுமில்லை. என்னைப்பற்றி அவதூறு பரப்புவர்கள் எதையும் இழக்கப்போவதில்லை… ஆனால் நான் வளர்ந்து வரும் நடிகை இதுபோன்ற பொய்யான செய்திகள் என்னுடைய நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்திருக்கும் நன்மதிப்புக்குக் களங்கம் விளைவிக்கும்… ஆகவே இது போன்ற கற்பனைச் செய்திகளில் என்னை இழுக்க வேண்டாம் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று டாப்சி பன்னு மேலும் குறிப்பிட்டார்.
-விஜய் ஆனந்த்.K




