பேட்மேன் பட வரிசையில் புதிய படமான தி டார்க் டைட் ரைசஸ் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
குருவி, ஆதவன், மன் மதன் அம்பு, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்தும் மைனா, மதராசப்பட்டினம்,பாஸ் என்கிற பாஸ்கரன், விண்ணை தாண்டி வருவாயா,கோ உள்ளிட்ட வெற்றிப்படங்களை விநியோகம் செய்தும் உள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.
முதல்முறையாக ஹாலிவுட் படமாக இந்நிறுவனம் பேட்மேன் பட வரிசையில் புதிய படமான தி டார்க் டைட் ரைசஸ் படத்தை விநியோகம் செய்ய உள்ளது.
மூன்று வரிசைகளைக் கொண்ட பேட்மேன் படங்களில் இது மூன்றாது படமாகும். பேட்மேன்
காமிக்கை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார்.பேட்மேன் பிகின்ஸ்(2005)தி டார் நைட் (2008)படங்களின் தொடர்ச்சியாக இது உருவாகியுள்ளது.
கிறிஸ்டியன் பேலே,மைக்கேல் கைனே,மார்கன் பிரிமேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சில்வியா கைலே மற்றும் பெனே ஆகிய புதிய பாத்திரப்க்கள் அறிமுகமாகின்றன. ஆனே ஹாத்வே மற்றும் டாம் ஹார்டி இவற்றில் நடித்துள்ளனர்.
தமிழகம்முழுவதும் ரெட் ஜெயண்ட் வெளியீடாக ஜூலை 20 ஆம் தேதி வெளியாகிறது பேட்மேன் -தி டார்க் டைட் ரைசஸ்.




