பில்லா 2 ஒரு வாரத்திற்கு ஹவுஸ் ஃபுல்

சென்ற ஆண்டு ஜூலை 12 இல் ஆரம்பிக்கப்பட்ட அஜித் நடிக்கும் பில்லா 2 திரைப்படம் சரியாக ஒரு வருடமாக இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு நாளை ஜூலை 13 இல் உலகம் முழுவதும் வெளியாகிறது.

சாதாரண மனிதன் எந்த சூழ் நிலையில் டான் (தாதா) -பில்லாவாக உருவாகிறான் என்று பில்லாவின் முற்பகுதி வாழ்க்கையைச் சொல்லும் படமாக பில்லா 2 வினை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலட்டி, இவர் ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து உன்னைப்போல் ஒருவனை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் பில்லா 2 வின் இசை யுவன் ஷங்கர் ராஜா.

கதாநாயகிகளாக பார்வது ஓமனக்குட்டன் மற்றும் புரூனா அப்துல்லா,வில்லன்களாக வித்யூத் ஜாம்வல் மற்றும் சுதன்ஷு பாண்டே நடித்திருக்கிறார்கள்.

மிகச்சவாலான சண்டைக்காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன் எண்டெர்டெயின்மெண்ட் இந்தியா லிமிட்டெட் சுனிர் கேதர்பால் மற்றும் வொய்ட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் லிமிட்டெட் சுரேஷ் பாலாஜி ஆகிய ஜாம்பவான்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் பில்லா 2 நாளை வெளியாவதைத் தொடர்ந்து இன்று முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே ஒரு வாரத்திற்கு அனைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டு விட்டன. சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் நாளை அதிகாலை 4 மணிக்கு பில்லா 2 வின் முதல் காட்சி ஆரம்பிக்கவிருக்கிறது.

ஜார்ஜியா நாட்டிலிருந்து சில தயாரிப்பாளர்கள் சென்னைக்கு வந்து அஜித்தின் படத்திற்கு அவர்களது ரசிகர்கள் அளிக்கவிருக்கும் வரவேற்பினை நேரிடையாகக் கண்டு களிக்கின்றனர்.

-Vijay Anandh.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks