வார்த்தைகளை விட முத்தங்கள் அதிகம் கொண்ட பாடல்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி தயாரிக்கும் படம் நீர்ப்பறவை. சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா, தம்பி ராமையா, பூ ராம்,சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ், சமுத்திரக் கனி,அழகம்பெருமாள்,அனுபமா, பிளாக் பாண்டி, அருள்தாஸ், நடிக்கும் இத்திரைப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் ரகுநந்தன்.

தேவன் மகளே தேவன் மகளே

சிலுவைக்காடு பூத்தது போல

சிறியேன் வாழ்வைப் பூக்க வைத்தாயே

என்று தொடங்கும் பாடலை பிரசன்னா, சைந்தவி, பாட, நடன இயக்குநர் காதல் கந்தாஸ் நடனம் அமைத்துள்ளார். இப்பாடல் காட்சியில் சம்பந்தப் பட்ட நடிகர் – நடிகைக்கு இடையில் அதிகளவில் முத்தங்கள் பறிமாறிக்கொள்ளப் பட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்ச் சினிமா பாடல்களில்  அதிக முத்தம் கொண்ட பாடலாக இந்தப் பாடல் இடம்பெறப் போகிறது.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks