உலகம் முழுவதும் பேட் மேன் சீரியல் படமான தி டார்க் நைட் ரைஸஸ் The Dark Knight Rises இன்று வெளியாகியிருக்கிறது. தமிழ் நாட்டில் ரெட் ஜெயண்ட் உதய நிதி ஸ்டாலின் இதனை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் டென்வர் – கொலொரோடோவில் உள்ள சென்ட்சூரி 16 தியேட்டரில் இன்று பேட் மேன் திரையிடப்பட்டது. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே 26 வயதுடைய 2 ம்ர்ம நபர்கள் துப்பாக்கியால் அங்குள்ள மக்கள் மீது சராமாரியாக சுட்டிருக்கிறான். அதில் ஒருவன் கண்ணீர் புகை குண்டை வீசீ திரைக்கு அருகே சென்று சுட்டதில் 12 பேர் பலியாயினர் மற்றும் 50 க்கும் அதிகமானோர் குண்டடி பட்டிருக்கின்றனர். துப்பாக்கியால் சுட்ட ஒருவன் பிடிபட்டிருக்கிறான்.
Photo courtesy : Ravi Nag




