பிறந்தநாள் வாழ்த்துகள் பரத்

பாய்ஸ் படத்தில் இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த இளம் நடிகர் பரத். காதல் திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சிறந்த ஜனரஞ்சக இளம் கதா நாயகனாக வலம் வரும்  நடிகர் பரத் சிறந்த நடனக் கலைஞரும் கூட.

பரத் ஒரு நடிகர்,  நாட்டியக் கலைஞர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர். தன்னுடைய சுற்றுப்புறமும் சுத்தமாக இருந்து தனது தேசமும் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். ஒரு காகிதத்தை எறிய வேண்டுமானால் கூட பத்திரமாக வைத்திருந்து எங்கே குப்பை சேகரிக்கும் இடம் இருக்கிறதோ அங்கே சென்று போடுபவர்.

போக்குவரத்தை விதிகளை மதிப்பதில் இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே அவர் ஒரு உதாரண மனிதர். இரவு பன்னிரண்டு மணியென்றாலும் , போக்குவரத்துக் காவலர்கள் இல்லையென்றாலும் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பவர்.

இன்று அவருக்குப் பிறந்த நாள். மிகவும் எளிமையாக தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடிய பரத், “ என்னைப் பொறுத்தவரை எப்பொழுதுமே பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது  “மெசேஜ் இன்பாக்ஸ் -மெயில் பாக்ஸ்கள்” வாழ்த்துகளால் நிரம்பி வழியும் நிலையில் பரத், “எனது பிறந்த நாளை ஒரு நன்றி அறிவிப்பு நாளாக மட்டுமே பார்க்கிறேன். எனது பெற்றோருக்கும்,உறவினர்கள், நண்பர்கள், எனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், உடன் நடிக்கும் சக நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி…

அடுத்த வருடம் இந்த நாள் நிச்சயம் சிறப்பானதாக இருக்கும். முன்னணி நடிகர்கள் வரிசையில் நானும் வருவேன். இயக்குனர் சசி இயக்கத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் 555 என்கிற படம் வெற்றிப்படிக்கட்டாக அமையும்” என்றார்.

www.mysixer.com இன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பரத்.

-விஜய் ஆனந்த்.K

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks