சரவணன் மீனாட்சி – திருமண வைபவம்

வரும் ஜூலை 27, இரவு 8.30 மணி முதல் ஒளிபரப்பாகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் மீனாட்சி தொடர் நேயர்களிடையே மிகவும் பிரபலம். காதல் கதை இந்தளவிற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்ததாக இருந்ததில்லை.  சரவணனாக மிர்ச்சி செந்திலும் மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நிஜ காதலர்களா என்று கேட்கும் அளவிற்கு நடிப்பில் அசத்துகிறார்கள்.  பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து, பெரியவர்களால் நிச்சயித்த கல்யாணமாக முடிந்திருக்க வெண்டிய கதை, காதல் கதையில் பயணித்து மீண்டும் திருமண ஏற்பாடுகளால் கலை கட்டிக் கொண்டிருக்கிறது.  இவர்களில் காதலும் ஊடலும் நேயர்களின் ·பேவரெட் காட்சிகளாகிவருகிறது. சரவணனின் அப்பாவாக நடிக்கும் ராஜசேகர் மற்றும் அம்மா குயிலியும் நடிப்பிலும் நகைச்சுவையிலும் கலக்கோகலக்கென்று கலக்குகின்றனர்.  மேலும் இந்த காதலில் துளியளவும் விரசமில்லாமல் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  சரவணன் மீனாட்சியின் திருமணம் ஏராளமான குளறுபடிகளைக் கடந்து வரும் ஜூலை 27ம் தேதி நடைபெறுகிறது.  நேயர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சரவணன் மீனாட்சி திருமணம் வரும் வெள்ளி இரவு 8.30 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

சரவணன் மீனாட்சி தொடரின் நட்சத்திரங்கள், மிர்ச்சி செந்தில், ஸ்ரீஜா, ராஜசேகர், குயிலி, Y.V. சுப்ரமணியம், ஸ்டாலின், ரவீந்தர், ரம்யா, சுசித்ர, சாய் மற்றும் பலர்.  சரவணன் மீனாட்சி தொடரை இயக்குபவர் அழகர்.  கதை திரைக்கதை வசனம் கதிரவன், ஒளிப்பதிவு கோபால்.   சரவணனுக்கும் மீனாட்சிக்கும் நடக்கும் திருமணத்தை வரும் ஜூலை 27ம் தேதி இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும் காணத்தவறாதீர்கள்.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks