பீட்சாவின் முதல் துண்டு – இந்த வார இறுதியில்

நாளைய இயக்குனர்கள் சீசன் 1 இல் சிறப்பான குறும்படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.

அட்டக்கத்தி என்கிற அட்டகாசமான காதல் நகைச்சுவைப் படத்தை எடுத்திருப்பவர் தயாரிப்பாளர் சிவி குமார்.

அட்டக்கத்தி வெளிவரும் முன்பாகவே கார்த்திக் சுப்புராஜின் கதையில் கவரப்பட்ட சிவி குமார் பீட்சா  படத்தினை ஆரம்பித்து முழுவீச்சில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருக்கும் பீட்சா படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்.இசைச் சேர்ப்பு வேலைகள் வெளி நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பீட்சா படத்தின் காட்சிகள் ரசிகர்களின் முதல் பார்வைக்காக இந்த வாரத்தில் வெளியாக இருக்கின்றன.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks