ஸ்ரீதேவி, 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், அதுவும் அவரது திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் புதிய உயரங்களைத் தொடுகிறார். ஸ்ரீதேவி நடித்த English Vinglish செப்டம்பர் 6-16 இல் நடைபெறப் போகிற இந்த ஆண்டு டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் கவுரி ஷிண்டே, இவர் திரைப்பட இயக்குனர் பால்கியின் R.Balki மனைவி. பால்கி தன் மனைவிக்காக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் செப்டம்பர் 14 அன்று முதன் முதலாக டோரண்டோவில் திரையிட இருக்கிரது.
ஸ்ரீதேவி, அடில் ஹுசைன், மெஹ்தி நெப்பு, மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற உலகப்படங்கள் பிரிவில் இந்தப் படத்தைத் திரையிட இருக்கிறார்கள்.
English Vinglish ஆங்கில மொழி தெரியாதலால் ஒரு பெண் தான் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக நினைக்கிறாள். அவளின் போராட்டமே
கதை. நியூயார்க்கிறகு குடிபெயறும் பெண்ணைப்பற்றியதாக கதை பயணிக்கிறது.
ஸ்ரீதேவி யின் மனதைக் கொள்ளை கொள்ளும் மிகச்சிறந்த நடிப்பாற்றலைச் சொல்லும் படமாக இருக்கும். ஆர் பால்கி கூறுகையில், “ எங்கள் படம் பெருமைமிகு டொராண்டோ திரைப்பட விழாவில் உலக திரையிடலில் ‘Galas’ பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது எங்களுக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. பில்லி பாப் தார்ன்டன், ரோகர் மைக்கேல், ராபர்ட் ரெட்போர்ட், மைக் நியூவெல், பென் அஃப்லெக் மற்றும் மீரா நாயர் படங்களுடன் இணைந்து திரையிடப்பட இருப்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. கவுரி மற்றும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். உலகம், ஸ்ரீதேவி-இந்தியாவின் மிகச்சிறந்த நடிகையின் வருகையினால் பெரிதும் மகிழும்” என்று குறிப்பிட்டார்.
அமித் திரிவேதி இசை, ஸ்வானந் கிர்கிரி -பாடல், ரசுல் பூக்குட்டி -ஒலி, லட்சுமண் உடேகர்- ஒளிப்பதிவு மற்றும் ஹேமண்டி சர்க்கார் – எடிட்டிங் என்று படம் ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. ராகேஷ் ஜுங்கன்வாலா, ஆர் தமனி, சுனில் லுல்லா மற்றும் ஆர் பால்கி ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
கவுரி ஷிண்டே எழுதி இயக்கும் இந்தப் படத்தினை ஈரோஸ் இண்டெர் நேஷனல் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ் இணைந்து வெளியிடுகின்றன.






