Pizza

நாளைய இயக்குனர்கள் சீசன் 1 கட் பண்ணினால் தமிழ்த்திரைப்படத்துறை. ஆம், சமீபகாலமாக அதுதான் நடக்கிறது. காதலில் சொதப்புவது எப்படி என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து இயக்குனர் பாலாஜி மோகன் கோடு போட அவரைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் ரோடு போட வந்து விட்டார். நாளைய இயக்குனர் முதல் சீசனில் சளைக்காமல் வெற்றிக் குறும்படங்களை இயக்கி இறுதிச் சுற்று வரை முன்னேறிய கார்த்திக் சுப்புராஜ் அட்டகாசமான ரொமாண்டிக் திரில்லராக பீட்சா படத்தினை இயக்கியுள்ளார்.

நாளைய இயக்குனர் சீசன் 1 இல்  அதிக அளவில் ரசிகர்களைச் சம்பாதித்த கதாநாயகன் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஆகிய படங்களைத் தொடர்ந்து பீட்சாவில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். அதே சீசனில் மற்றொரு சிறந்த நடிகராக அடையாளங்காணப்பட்ட ஜெயசிம்ஹாவையும் பீட்சாவில் களமிறக்கிவிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

விரைவில் சந்தோஷ்  நாராயணின் இசையில் உருவான பீட்சா பாடல்கள் வெளியாக விருக்கும் நிலையில் பீட்சாவின் முன்னோட்டத்தினை – டீசரினைக் கண்டு களியுங்கள்.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks