சிவப்பு, இப்படம் தென் தமிழகத்தில் கட்டுமான தொழில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இடையே உள்ள காதல், கோபம், வறுமை இவற்றை குறிப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளாதல் இத்தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் எஸ்.சதய சிவா கழுகு படத்திற்குப் பிறகு இவர் இயக்கும் இரணடாவது படம்.
இந்திய சினிமாவில் குறிப்பிடத் தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும் பல முறை தேசிய விருதுகளைப் பெற்றவருமான மது அம்பட் சிவப்புக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க எடிட்டர் காசி விஸ்வநாதன் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார்.
இசை, சி.சத்தியமூர்த்தி, அட நம்ம எங்கேயும் எப்போதும் சத்யா. தனது முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்தவர். ஒரு சவாலான கதையான சிவப்பு பட இசையமைப்பில் மும்முரமாக உள்ளார்.
நாயகனாக நவீன் சந்திரா வளர்ந்து வரும் இளம் நாயகன். இவர் நடித்த அந்தாள ராட்சஸி தெலுங்கு படம் வெளிவருமுன்பே சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
திருதிரு துறுதுறு ரூபா மஞ்சரிதான் சிவப்பிலும் கதாநாயகி. மிகவும் தேர்ந்துடுத்து தான் படங்களில் நடிக்கிறார். விஜய் ஆண்டனி தயாரித்து அவர் கதா நாயகனாக அறிமுகமாகும் நான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.
மேலும் சத்யராஜ், செல்வா மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
முக்தா சீனிவாசன் வழங்க, முக்தா எண்டெர்டைன்மண்ட் சார்பாக இப்படத்தைத் தயாரிப்பவர்கள் முக்தா ஆர் கோவிந்த் மற்றும் பிரியதர்ஷினி கோவிந்த்.




