சென்னை காமராஜர் அரங்கத்தில் செல்லாத்தா எங்க மாரியாத்தா… அண்ணாமலையே ஈசனே, அரகரசிவனே… அண்ணாமலையே…. போன்ற பக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்னவென்று பார்த்தால் அது சங்கரா டிவியில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் ஆடி திருவிழா சீசன்- 2 நிகழ்ச்சி. அதைப்பற்றி ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் சி இ ஓ( CEO) சுரேஷ்குமார் கூறுகையில், “சங்கரா டிவியில் ஆடித்திருவிழா சீசன் -2 ஆரம்பாகிவிட்டது. சரிகமபத நியுடன் இணைந்து ஆன்மீக பாடல் நிகழ்ச்சிகளை இப்பொழுது நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறோம். தற்சமயம் சென்னையில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக வரப்போகிறது. இனி வரும் காலங்களில் பங்குனி உத்திரம், மகாலட்சுமி விரதம், கிருஷ்ணர் பிறந்த நாள் என நேரடி நிகழ்ச்சிகளைத் தரப்போகிறோம்.
கிருஷ்ணர் பிறந்த இடத்தில் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்டமான கிருஷ்ணர் ஆலயத்தின் ஜென்மாஷ்டமி தின நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறோம்.
டி ஆர் பி ரேட்டிங் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. தென் மாவட்டங்களில் சங்கரா டிவியில் ஒளிபரப்பப் படும் ஆன்மீக நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். சேலத்தில் ஒரு கோயிலில் தலித் பூஜாரி பூஜை செய்ததை ஒளிபரப்பினோம். அதனைப் பார்த்த வேலூரைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதி கோயில் பூஜைகளை ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று கோயில் பூஜைகளை தினமும் இரவு 8 மணிக்கும் மறு ஒளிபரப்பாக மறு நாள் காலை 8 மணிக்கும் ஒளிபரப்புகிறோம்” என்றார்.
சங்கரா தொலைக்காட்சியில் பக்திபாடல், பக்தி படங்கள் ஒளிபரப்பலாமே என்று கேட்டபோது, “சினிமாவில் வந்த அருமையான பக்திப் பாடல்களை ஒளிபரப்பினோம். ஆனால் நேயர்கள் சினிமாவே வேண்டாம் என்கிறார்கள். சினிமா கெட்ட விஷயம் என்பது அல்ல… இந்து மதம் சமுத்திரம் போன்றது. அதில் நிறைய விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றனவே! மேலும் பால நர்த்தனம், பாலசங்கீதம்,பஜன் சாம்ராட் என புதுமையான விஷயங்களைத் தரப்போகிறோம்” என்றார்.
More pictures on http://www.mysixer.com/?p=19075
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கரா தொலைக்காட்சியினை விரும்பிப் பார்க்கிறாராமே என்ற கேட்டபொழுது, “திண்டிவனம் சுவாமிஜி அடிகளார் ஹோமம் பண்ண ரஜினி வீட்டிலிருந்து அரிசி மற்றும் பூஜைப் பொருட்களைக் கொண்டு வந்த அவரது உதவியாளர் எங்க தலைவர் சங்கரா டிவி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார் என்று சொன்னார். திருவண்ணாமலையாரின் அருள் பெற்ற ரஜினியே எங்களது சங்கரா டிவி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார் சுரேஷ்குமார்.




