Eros International – இரோஸ் இண்டெர் நேஷனல் வெளியீடாக அடுத்து வர இருக்கும் படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் சிறந்த நடிகைகளுள் ஒருவரான ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
ஹிந்தி படவுலகில் புகழ்பெற்ற இயக்குனர் ஆர் பால்கி தயாரிக்க அவரது மனைவி கெளரி ஷிண்டே எழுதி இயக்கியிருக்கும் படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இந்தப் படத்தின் முன்னோட்டமானது (Trailer) ஸ்ரீதேவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 13 ஆம் தேதி மும்பையில் வெளியிடப்பட்டது.
இந்திய ரசிகர்கள்,உலக ரசிகர்களுடன் குறிப்பாகத் தமிழ்சினிமா ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் உலகம் முழுவதும் 2012 அக்டோபர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.




