பிரமாண்டமாக நடைபெற்ற தாண்டவம் பாடல்கள் வெளியீட்டு விழா
சுதந்திரதினமான நேற்றைய ஆகஸ்ட் 15 ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் சிறப்பான ஒரு நாள் என்றால் விக்ரம் ரசிகர்களுக்கும் இளம் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ரசிகர்களுக்கும் மேலும் சிறப்பான நாளாக அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.
பிரிக்க முடியாதது எதுவோ என்று இன்றைய தருமி கேட்டால் யூடிவி -இயக்குனர் விஜய்-சீயான் விக்ரம்- நிரவ் ஷா –ஜி வி பிரகாஷ் என்று முக்கியமான இந்த ஐவர் கூட்டணி தான் என்று பதில் கிடைக்கும். இவர்களுடன் சென்னை டிரேட் செண்டரையும் சேர்த்து ஆறு பேர் கூட்டணி என்று வைத்துக்கொள்ளலாம் போல, அந்த அளவுக்கு தெய்வத்திருமகள் பாடல் வெளியீட்டு விழா நினைவுகள் இன்னமும் தன்னை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதே கூட்டணியின் அடுத்த பிரமாணட படைப்பான தாண்டவம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை சென்னை டிரேட் செண்டர் சந்தித்திருக்கிறது.
பார்வைத்திறன் குன்றியோருக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் அறிவியல் கண்டு பிடிப்பு எகோ லொகேஷன் (Eco – Location) என்கிற யுக்தியை மையக்கருவாகக் கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை தான் தாண்டவம். அரங்கு நிறைந்திருந்த விக்ரம் ரசிகர்கள் பிரமாண்டத் திரையில் பார்த்து ரசிக்கும் பொருட்டு தாண்டவம் படத்தின் முன்னோட்டமும் காண்பிக்கப்பட்டது. சீயான் விக்ரம் விளையாடியிருக்கிறார்.
Find more pictures of the event at http://www.mysixer.com/?p=19280
சராசரியாக 25 வயதில் ஒரு இளைஞன் என்ன செய்து கொண்டிருப்பான் அவனே சாதனையாளனாக இருந்தால் என்ன செய்து
கொண்டிருப்பான். பல துறைகளிலும் இளம் சாதனையாளர்கள் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் திரைப்பட இசையமைப்பாளராக வெயிலில் அதிகமான வியர்வைகளுடன் ஆரம்பித்த ஜீ வி பிரகாஷின் இசைப்பயணம் இன்று 25 ஆவது படமான தாண்டவத்தில் நிஜமான தாண்டவம் ஆடியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. நடுவில் அவரது ஒவ்வொரு படங்களும் அவருக்கு மைல்கற்களே! அவரது மைல்கற்கள் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் வந்திருந்து வாழ்த்திய அனைத்து திரையுலகச் சாதனையாளர்களின் ஒருமித்த வாழ்த்தாக இருந்தது.
ஜி வி பிரகாஷின் இசையில் தாண்டவம் படத்திற்காக நா முத்துக்குமார் எழுதிய பாடல்கள் தமிழ்க வயற்பரப்புகள் செட்டி நாட்டு பிரமாண்டமான வீடுகள், டெல்லி மற்றும் லண்டன் போன்ற இடங்களில் வித வித மான கருத்துக்களுடன் (Concepts) படமாக்கப் பட்டிருந்தன.
குறிப்பான ஐரோப்பிய கடற்கரை ஒன்றில் ஜெர்மன் கலைஞர்கள் தீட்டிய பிரமாணடமான மணல் ஓவியங்களில் விக்ரமும் அனுஷ்காவும் பாடி ஆடுவதாகக் காட்சிப்படுத்தப்பட்ட சைந்தவி பாடியிருக்கும் உயிரே உயிரே பாடம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு தலைவாழை விருந்தாக இருக்கும். இந்தப் பாடலை தியேட்டரில் பெரிய திரைகளில் பார்த்தால் மட்டுமே நீரவ் ஷாவின் அற்புதமான ஒளிப்பதிவினையையும் மணல் ஓவியங்களையும் முழுமையாக ரசிக்க முடியும்.
விகரமின் உயிர் இயக்குனர் பாலாவும் வணிக ரீதியான படங்களை இயக்குவதில் முன்னோடியாகத்திகழும் இயக்குனர் லிங்குசாமியும் தாண்டவம் படத்தின் ஜி வி பிரகாஷின் வெள்ளி விழா படப் பாடல்களை வெளியிட தாண்டம் குழுவினருடன் சிறப்பு அழைப்பாளர்களாகக்கலந்து கொண்ட இயக்குனர்கள் பிரியதர்ஷன்,பி.வாசு, எ.கருணாகரன், காந்தி கிருஷ்ணா, விஜி, புஷ்கர் காயத்ரி, ஹரி, வசந்தபாலன், வெற்றிமாறன் , எல்ரெட் குமார், ஷங்கர் தயாள், எடிட்டர் மோகன், நடிகர்கள் பரத்,சிவகார்த்திகேயன், ஏ எல் அழகப்பன் மற்றும் தாண்டவம் படத்தில் ஒரு முக்கிய பாத்திரமேற்றிருக்கும் கஜபதி பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக ரோபோ கணேஷ், அவிக்னா மற்றும் அக்னிக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகளுடன் கண்களைக் கவரும் ரெட் டிராகன் – உயர்ந்த மனிதர்கள் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.
யூடிவி சித்தார்த் ராய் கபூர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ரம்யாவுடன் மற்றொரு ஆர் ஜேவும் நடிகருமான பாலாஜி யும் சேர்ந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
-விஜய் ஆனந்த்.K




