Share

ஜென்சன் & நிக்கல்சனுடன் ஷீன்லாக் இணைகிறது

வருடத்திற்கு நாற்பது ஆயிரம் கோடிகள் பரிவர்த்தனைகள் நடக்கும் வண்ணப்பூச்சு சந்தையில் ஆறாம் இடத்தில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஷீன்லாக் நிறுவனம், வருங்காலங்களில் ஜென்சன் & நிக்கல்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த இரண்டு பெரிய நிறுவனங்கள் இனி ஜென்சன் & நிக்கல்சன் பெயிண்ட்ஸ் பி.லிட். என்கிற பெயரில் சந்தையில் கோலோச்ச உள்ளார்கள்.  51:49 என்கிற விகிதத்தில் ஜென்சன் & நிக்கல்சன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் வருடத்திற்கு 10 கோடி முதலீடு மற்றும் 750 கோடி விற்பனை இலக்காக நிர்ணயித்திருக்கின்றார்கள்.

ஜென்சன் & நிக்கல்சன் உற்பத்தியைப் பார்த்துக்கொள்ள ஷீன்லாக், இந்தியச் சந்தையில் தனது நம்பிக்கையான 150000 வி நியோகஸ்தர்கள், சந்தைப்படுத்துதலில் அனுபவம் ஆகியவற்றில் இன்னும் அதிக கவனம் செலுத்தும்.

இந்த இணைப்பு பற்றி ஷீன்லா நிர்வாக இயக்கு நர் டாக்டர் சுதீர் பீட்டர் கூறும்போது, “ கடந்த 50 வருடமாக நாங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளோம்.இரண்டு பொருட்களில் நாங்கள் முன்னோடிகளாக உள்ளோம்… முதன்முறையாக நான் ஆல்கஹாலிக் உட் பாலிஷ் மற்றும் பெட் பாட்டிலில் தின்னரை அறிமுகம் செய்துள்ளோம். போட்டிகள் நிறைந்த இந்திய வண்ணப்பூச்சு சந்தையில் ஜென்சன் & நிக்கல்சன் பெயரில் பொருட்களை விற்பனைக்குக் கொண்டுவரும் போது, எங்களை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள முடியும்…” என்றார்.

ஷீன்லாக் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “ ஜென்சன் & நிக்கல்சனின் அலங்கார பூச்சுக்களை சந்தைப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.. “வண்ணங்களைப் பார்க்கிற போதெல்லாம் எங்களையே யோசிக்க வேண்டும்” என்கிற அவர்களின் வாசகம் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் எளிதில் கவர்ந்திழுக்கும். இவ்வாசகம் இந்திய சந்தையில் எங்களை நிலை நிறுத்திகொள்ள உதவும்..” என்றார்.

இந்த சந்திப்பில், “ஷீன்லாக் தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஸ்ரீதரன்,ஜென்சன் & நிக்கல்சன் ஆனந்த் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.