Share

பெண்கல்விக்கான ஓட்டம்

PenKalviRun 1

-க.விஜய் ஆனந்த்

பெண்குழந்தைகளின் கல்விக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக எம் ஓ பி வைஸ்ணவா மகளிர் கல்லூரி மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த பெண்கல்விக்கான ஓட்டம் PenKalviRun இன்று நடைபெற்றது.

எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் திரளாகக் கலந்து கொள்ள, பிறதுறை பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என மூவாயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று 5 கிமீ பெண்கல்விஓட்டத்தில் ஓடினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை முழுமையாக ஓடிக்கடக்க முடியாத மாணவிகள் , நடந்தாவது இல்லை அடையவேண்டும் தாங்கள் பலவீனமடைந்தாலும் தங்களது பெண்கல்விக்கான இந்த உயரிய நோக்கம் பலவீனமடைந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தோடு , நடந்தாவது இலக்கினை அடையவேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பயிற்சிகள் முடிந்து ஓட்டம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால், மாணவிகளிடம் மிகவும் இயல்பாக உரையாடி அவர்களது நோக்கத்திற்கு வலுசேர்த்ததுடன் பெண்கல்விக்கான ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரி முதல்வர் முனைவர் லலிதா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

பெண்கல்வி ஓட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு வழக்கமாக மெரினா கடற்கரையில் ஓடுபவர்கள் ஆலோசனைகளை வழங்கினர். காவல்துறையினர், மிகச்சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கியதோடு போக்குவரத்து காவலர்கள் மிகச்சீரிய முறையில் பெண்கல்வி ஓட்டத்திற்கு துணைபுரிந்தனர்.

ஓட்டத்தை நிறைவு செய்த மாணவிகளுக்கு எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரியின் இசைக்குழுவினர் இன்னிசை விருந்து அளித்தனர்.

PenKalviRun 2