Share

கண் தானத்தை வலியுறுத்தி மாரத்தான் ஐயர்னிங்

வெளியே கிளம்பும் போதுதான் உடைகளை தேய்த்து வைத்தோமா என்கிற நினைவே வரும். அப்படியே எடுத்து தேய்க்கலாம் என்றால் ஒரு உடையை தேய்க்கவே அவ்வளவு சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த நிலையில், துணிகளைத் தேய்ப்பதில் கின்னஸ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் சென்னை வாலிபர் டேனியல்.2000 ஆயிரம் துணிகளை 100 மணி நேரத்தில் தேய்த்த ஆஸ்திரேலியரின் சாதனையை 26 மணி நேரத்தில் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறார் டேனியல்.ஆஸ்திரேலியர் 100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தார் சென்னை வாலிபர் டேனியல் சூர்யா.

சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில் 25ம் தேதி காலை , சென்னை மேயர் சைதை துரைசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சாதனை நிகழ்ச்சியினை,  லயன்ஸ்கிளப் A1, A6 மாவட்டங்கள் சார்பில் லயன்ஸ் கவர்னர்கள் குமார், குணராஜா, மாவட்ட தலைவர்கள் தியாகராஜா, முரளி, சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தினர்.

சாதனை ஆரம்பித்த இரண்டாம் நாளிலேயே மதியம் 1 மணிக்கு கின்னஸ் சாதனையான 2000 துணிகளுக்கு மேல் ஐயர்னிங் செய்து டேனியல் சூர்யா புதிய உலக சாதனை படைத்தார்.

முதல் முறையாக வெளி நாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை இந்தியர் அதிலும் குறிப்பாக சென்னை வாலிபர் முறியடித்தது  குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருந்த கின்னஸ் உலக சாதனையை டேனியல் சூர்யா முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வந்த டேனியல் சூர்யா, இ ந்த 5 நாளில் சுமார் 1 கோடி பேர்களிடம் கண் தான உறுதி மொழி பெற வேண்டும் என்கிற மற்றுமொரு சிறப்பான நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார் என்பதும் பாரட்டத்தக்கது.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவருமான தியாகராஜா கூறும்போது, “கண் தான விழிப்புணர்வை வலியுறுத்தி இ ந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாதனை நிகழ்ச்சி முடியும் போது ஒரு கோடி பேராவது கண்  தான உறுதி தர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.முதல் முதலாக வெளி நாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை ஒரு இந்தியர் குறிப்பாக தமிழர் முறியடித்ததை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் ..” என்றார்.