Share

கனவு நாயகனின் கனவை நனவாக்கும் பேரன்கள்

-K.Vijay Anandh

இந்தியக்குழுந்தைகளின் மனங்களில் உயர்ந்த  கனவுகளை விதைத்த மறைந்த முன்னாள் குடியரசுதலைவர் ஏ பி ஜே அப்துல்காலமைப் பொறுத்தவரை அவரது அண்ணன் ஏ பிஜே எம் மரைக்காயர் தான் என்றுமே ஆதர்ச நாயகர் என்றால் அது மிகையாகாது. 2014 நவம்பர் 5 ஆம் தேதி இராமேஸ்வரம் வந்து அண்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டுச் சென்ற அப்துல் கலாம், அண்ணனின் 100 வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார், அந்தக் கனவை தனது அண்ணன் வழிப்பேரன்களிடமும் பகிருந்திருக்கிறார். அண்ணனின் 100வது பிறந்த நாளுக்கு முன்பாகவே தங்கத்தம்பி கலாமைக் காலன் அழைத்துக்கொண்டு அனைவரையுமே துயரத்தில் ஆழ்த்திவிட்டான்.

கனவுகளை விதைத்து அதனை அறுவடை செய்யும் வித்தையையும் கற்றுக்கொடுத்தவராயிற்றே கலாம், அவரது கனவை நிறைவேற்றாமல் பேரன்கள் விட்டுவிடுவார்களா..?

இராமேஸ்வரத்தில் ஹவுஸ் ஆஃப் கலாம் என்கிற அமைப்பை நடத்தி வரும் ஷேக் சலீம் உள்ளிட்ட கலாமின் பேரன்கள், வரும் நவம்பர் 5 ஆம் தேதி மரைக்கையரின் 100 வது பிறந்த நாளை, மரக்கன்றுகள் நடுதல், நூலகம் அமைத்தல், ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி உதவி அளித்தல் மற்றும் சிறந்த 100 பேரைத் தேர்ந்தெடுத்து  அவர்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்குதல் என கலாமின் கனவுக்குச் சிறிதும் களங்கம் கற்பித்துவிடாத அளவிற்கு  விழா எடுக்கின்றனர்.

கலாமின் நெருங்கிய நண்பர் ஒய் எஸ் ராஜன் மற்றும் கலாம் குடும்பத்தினர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்தியிருக்கின்றார்கள். அன்றைய தினம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கவிருக்கும் நடிகர் விவேக், கலாமின் நினைவிடத்தைச் சுற்றி 100 மரக்கன்றுகளை நடுகிறார்.

இந்த விழா, இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள Daiwik Hotel லில் வைத்து  நடைபெறவுள்ளது.

கலாமின் மறைவினையடுத்து அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட இந்தியப்பிரதமர்  நரேந்திரமோடி, கலாமின் மூத்த சகோதரர் மரைக்காயரின் காலைத்தொட்டு வணங்கி ஆசீர்வாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

modi-with-maraikkayar