Share

அப்பாவின் சாதனையைப் பறித்த மகன்

K.Vijay Anandh

தீரஜ், 6 அடி 4 அங்குல உயமுடன் தமிழ் சினிமா நாயகர்களுடன் மோதவும், ரசிகர்களைப் பயமுறுத்துவும் தயாராகிவிட்ட இளம் வில்லன்.

இவரைப் பார்த்த மாத்திரத்தில், தனது துப்பறிவாளன் படத்தில் வாய்ப்பு கொடுத்து ஆச்சிரியப்படுத்தியிருக்கிறார், மிஷ்கின்.

அவரைத் தொடர்ந்து, ‘வில்லன்களை வடக்கே இருந்துதானே இறக்குமதி செய்யவேண்டியிருக்கு..” என்கிற மனநிலையுடன் இருந்த மனோபாலா முன் தீரஜ் போய் நிற்க பார்த்த மாத்திரத்தில் சதுரங்க வேட்டை 2 படத்தில் முக்கிய வில்லன் வேடம் கொடுத்திருக்கிறார்.

” சிறிய வயதிலிருந்தே நடிப்பு தான் கனவு..” என்று கூறும் தீரஜின் கனவு நிறைவேற ஆரம்பித்துவிட்டது.

அது சரி, இப்பத்தானே நடிக்க வந்திருக்கிறார், இவர் என்ன சாதனையை முறியடித்தார் என்று யோசிக்கின்றீர்களா..?

நாளைய மனிதன் முதல் மங்களாபுரம் வரை நூற்றுக்கணக்கான படங்கள் நடித்துவிட்ட அஜய் ரத்னம் தான் தீரஜின் அப்பா.

6 அடி 3 அங்குலத்துடன் தமிழ்சினிமாவின் உயரமான நடிகராக வலம் வந்த வரை , ஒரு அங்குலம் அதிகமான தீரஜ் முந்திவிட்டார் தானே!

இன்றைய தேதியில் அதிக உயரமான தமிழ் நடிகர் என்கிற சாதனைக்குச் சொந்தக்காரராகிவிட்ட பி.ஈ படித்த தீரஜுக்கு, விஸ்வேஸ் என்னும் தம்பியும் இருக்கிறார்.

நீங்கள் எப்பொழுது நடிக்க வருகிறீர்கள்..? என்று கேட்டதற்கு, ” பிசினெஸில் தான் என் முழுக்கவனமும்..” என்கிறார் சர்வதேச வியாபாரத்தில் எம்.பி.ஏ பட்டம் வாங்கியிருக்கும் விஸ்வேஸ்.

சிவாக்குமாரைத் தொடர்ந்து அவர்களது மகன்கள் சூர்யா – கார்த்தி நாயகர்களாகிவிட்டார்கள்.

வருவீங்க விஸ்வேஸ்,  அண்ணன் – தம்பி வில்லன்களைத் தமிழ் சினிமா ரசிகர்