Share

Xiaomi இன் புதியவரவுகள் Redmi 4, 4A மற்றும் Mi Router 3C

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi , Redmi 4 , Redmi 4A மற்றும் Mi Router 3C ஆகிய புதிய வரவுகளை அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய Xiaomiஇன் துணைத்தலைவரும் , இந்திய மேலாண்மை இயக்குநருமான மனு ஜெயின், ” ஆந்திராவில் ஸ்டார் சிட்டியில் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது… அங்கு பணியாற்றும் 90% பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு உற்பத்திக் கூடங்களிலும் விநாடிக்கு ஒரு போன் என்கிற வேகத்தில் உற்பத்திசெய்ய இயலும்…

ஆன் லைன் மூலமாக சாமி மொபைல்களைப் பெறுவதில் இருக்கும் சிரமங்களைக் களைய, நேரடி விற்பனை மையங்களைத் திறக்கவுள்ளோம்…

பெங்களூருவில் திறக்கப்பட்ட முதல் MI நேரடி ஆஃப்லைன் மையத்தில் முதல் நாளில் 12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் , டெல்லி, ஹைதராபாத் மற்றும் டெல்லியிலும் MI நேரடி சாமி ஆஃப் லைன் விற்பனை மையங்கள் திறக்கப்படவுள்ளன…” என்றார். 

Mi Router 3C WiFi தொழில் நுட்பத்தில் 80 மீட்டர் சுற்றளவுக்கு இணைய சேவை வழங்குவதுடன், ஒவ்வொரு பயன்பாட்டாளரின் இணையப் பயன்பாடுகளைக் கூட்டவோ குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

சாமி மொபைல்களுக்கான பழுது நீக்க தமிழ்நாட்டில் உள்ள  32  மையங்களில், சென்னையிலேயே 9 மையங்கள் இருக்கின்றன.