Share

திரிஷா- விஜய்சேதுபதி யின் 96 தொடங்கியது

K.Vijay Anandh

கமல்ஹாசன் முதல் சூர்யா, விக்ரம், விஜய் முதல் சிம்பு, தனுஷ் வரை  தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்ட திரிஷா,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக டூயட் பாடப்போகும் படம் 96.

மெட்ராஸ் எண்டெர்பிரைசஸ் நந்தகோபால் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமாகிறார் நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம் ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார்.

96 படத்தின் தொடக்கவிழா இன்று மெட்ராஸ் எண்டெர்பிரைசஸ் அலுவலகத்தில் நடந்தது.

” 96 ஒரு பால்யக் காதல, அதே நேரம் ஒரு பக்குவக் காதல், எல்லோருக்கும் பிடித்த காதல், மகிழ்ச்சியான காதல், நெகிழ்ச்சியான காதல்..”  என்று டி.ஆர். பாணியில் படத்தைப் பற்றிக் கூறி அசத்தினார் விஜய்சேதுபதி என்றால், ” கண்கலங்க வைக்கும் காதல்..” என்று முத்தாய்ப்பாக முடித்து வைத்தார் திரிஷா.

நீங்க முதல் படம் நடிக்கும் போதே திரிஷா ஒரு லேடி சூப்பர் ஸ்டார், அவருடன் நடிக்கப்போவது பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டபோது, ” விடிவி படத்திற்கு நானும் பெரிய ரசிகன்…திரிஷாவுடன் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது….” என்றார் விஜய்சேதுபதி.

அஜித் உடன் கும்பகோணம் போனீங்க, இப்பொழுது விஜய்சேதுபதியுடன் போகப்போறீங்க.. எப்படி இருக்கிறது உங்களது மனநிலை என்று கேட்டபோது, “விஜய் சேதுபதியுடன் இனிமேல் தான் போகப்போகிறேன். என்றாலும், கும்பகோணம் எனக்கு எப்பொழுதுமே பிடித்த ஊர்… விஜய்சேதுபதியுடன் நடிக்கவிருப்பாதை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன்..” என்றார் திரிஷா.

96 ஆம் வருடத்தைய 10 அல்லது 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காதலைச் சொல்லப்போகும் படத்திற்காக விஜய்சேதுபதி – திரிஷா ஆகியோரின் இள வயது நடிகர்களை அச்சு அசலாகத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிற இயக்குநர் பிரேம், ”  அவர்களது புகைப்படங்கள் ரசிகர்களக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வெளியிடப்படும் ..” என்று தெரிவித்தார்.

கிட்டத்தட்ட நடுவுல கொஞ்சம் பக்க்கத்தக்காணோம் படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள், 96 இல் நடிக்கிறார்கள்.

96 க்காக கோவிந்த மேனன் இசையில் உமா தேவி, கார்த்திக் நேத்தா ஆகியோர் பாடல்கள் எழுதவுள்ளனர்.

கும்பகோணம், அந்தமான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.