Share

சினிமாவைக் காப்பாற்றுங்கள் ரஜினி – டி.சிவா

K.Vijay Anandh

இவன் தந்திரன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய டி.சிவா , ஜி.எஸ்.டி யில் இருந்து சினிமாவைக் காப்பாற்ற ரஜினிகாந்த் குரல்கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“நல்ல படம் எடுத்து தப்பான வெளியீடுகளால் பல படங்கள் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றன… இந்தப் படத்தை சினிமா வியாபாரம் நன்கு அறிந்த தனஞ்செயனை வெளியிட வைத்ததிலிருந்தே ஆர்.கண்ணன் தந்திரனாகிவிட்டார்..” என்ற டி.சிவா, “சினிமா இப்பொழுது பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சென்சாருக்குப் போனால் சான்றிதழ் வாங்குவது வரை போராட்டமாக உள்ளது. தொலைக்காட்சி விளம்பரக் கட்டணங்கள் ஆறே மாதங்களில் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது… ஜி.ஸ்.டி யால் தென்னிந்திய சினிமா அடுத்து என்னசெய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. அனைத்து அமைப்புகளும் இதற்கு ஒரு தீர்வு காண , மத்திய அரசைத் தொடர்புகொள்ள முயற்சித்தும் பாராமுகமாக இருக்கிறார்கள்… கமல்ஹாசன், தானாகவே முன்வந்து ஜி.எஸ்.டிக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த், நீங்கள் ஆண்டவம் போலக்.காட்சியளிக்கிறீர்கள்… நீங்கள் பேசினால் எல்லோரும் திரும்பிப் பார்ப்பார்கள்…

சினிமாவைக் காப்பாற்றக் குரல் கொடுங்கள். இப்பொழுதும் நீங்கள் சினிமாவுக்காகக் குரல் கொடுக்காமல் இருக்கக் கூடாது..” என்று ரஜினிகாந்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.