Share

இவன் நிசமாவே தந்திரன்

K.Vijay Anandh

கடல் படத்தில் நாயகனாக அறிமுகமான பிறகு, ரங்கூன் வெற்றி வரை சினிமாவை நிறையவே கற்றுக்கொண்ட கெளதம் கார்த்திக் , முதன் முதலாக தனிப்பட்ட முறையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, சராமரியான கேள்விகளுக்கு மிகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் பதில் சொல்லி அசத்தினார்.

கடல் அறிமுகம், ரங்கூன் வெற்றி… எப்படி உணர்கின்றீர்கள்..?

கடல் எனக்கு ஒரு நல்ல அறிமுகம் கொடுத்தது. என்னை நடிகனாக கண்டுபிடிக்க உதவியது.. ரங்கூன் வெற்றி எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுத்திருக்கிறது…

பெரிய இயக்குநர் களுடன் தொடர்ந்து நடிப்பீர்களா அல்லது புதுமுக இயக்குநர் களுடன் ..?

பெரிய இயக்குநர் கள் நிறையச் சொல்லித்தருவார்கள். புதுமுக இயக்குநர் களிடமிருந்து மியூட்சுவலாக நிறையப் பகிர்ந்து கற்றுக் கொண்டு சேர்ந்து வளரலாம்… புதுமுக இயக்குநர் களுக்கு கெளதம் எப்பொழுதுமே தயாராகவே இருக்கிறேன்….

தனுஷுக்கு அடுத்து ஹிந்திக்குப் போவீர்களா..?

ஹிந்தி தெரியாது… ஆனால், தாத்தாவைப்பற்றியும் அப்பாவைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பதால் என் மீது அன்பு செலுத்த நிறையப்பேர் அங்கே இருக்கிறார்கள்.. ஒரு தமிழ் நடிகனாகவே அவர்கள் என்னைக் கொண்டாடும் போது, எதற்கு தனியாக ஹிந்தியில் எதற்குத் தனியாக நடிக்க வேண்டும்..?

சிவாஜி- முத்துராமன் சேர்ந்து நடிச்சுட்டாங்க, பிரபு-கார்த்திக் சேர்ந்து நடிச்சுட்டாங்க, தமிழ் சினிமாவின் பெருமைமிகு மூன்றாம் தலைமுறை நாயகர்கள் விக்ரம் பிரபுவும் நீங்களும் எப்பொழுது சேர்ந்து நடிக்கப் போறீங்க..? அப்படி நடித்தால் அக்னி நட்சத்திரம் 2 எடுக்கப்படுமா..?

சத்தியமா அக்னி.நட்சத்திரம் 2 எடுத்தால் நடிக்க மாட்டேன்… ஏனென்றால் அப்பாவுடைய கிளாசிக் படம் அது.அதைக் கெடுக்க விரும்ப வில்லை…விக்ரமுடன் நிச்சயமாக சேர்ந்து நடிப்பேன், ஏற்ற கதை அமைந்தால்…

அப்பா – கார்த்திக் உங்களுக்கு ஆலோசனைகள் சொல்வாரா..?

இல்லை,  நன்கு படிக்க வைத்துவிட்டார்… சுதந்திரமாக முடிவுகள்.எடுக்க  என்னை அனுமதிப்பார்… எப்படி அவர் நடிக்க வரும் போது தாத்தா – முத்துராமன் இல்லாத நிலையில் அவராகவே விழுந்து.எழுந்து நின்றாரோ அதைப்போலவே நானும்   நல்ல கெட்ட விஷயங்களை உணர்ந்து உயரவேண்டும் என்று நினைக்கிறார்… அதையே  நானும் விரும்பி பின்பற்றி வரவும் செய்கிறேன்… ஏதாவது கஷ்டமான நேரங்களில் அம்மாவுக்குப் போன் செய்வேன்.. அவர் எனக்கு ஆறுதல் சொல்வார்…

கல்யாணம்..?

நிச்சயம் காதல்.கல்யாணம்.தான்… சாதி மதம் எல்லாம் இப்பொழுது யார் பார்க்கிறார்கள்… இவர் என்னை நன்கு பார்த்துக் கொள்வார் என்கிற எண்ணம் தோன்றினால் அந்தப் பெண்ணைக் காதலிக்க ஆரம்பிக்கவேண்டியது தான்…

அரசியலுக்கு வருவீர்களா..?

அப்பா எனக்கு அவர் கட்சி சார்ந்த அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அவரது அரசியலால் எனது திரையுலக பயணத்திற்கு எவ்வித இடைஞ்சலும் இல்லை…

தனக்கான கதைகளைத் தானே கேட்பதாகவும்,  ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசனைகள் கேட்பதாகவும் தெரிவித்த கெளதம் கார்த்திக், தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே பல்வேறு ஊடக நிருபர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் பதில் சொல்லி அசத்தினார். கெளதம் கார்த்திக், நிசமாகவே தந்திரன் தான்!