Share

மெரினாவில் பிரமாண்ட மூவர்ணக்கொடி

மத்தியில் மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சி வந்ததிலிருந்து, யோகாசனம் உள்ளிட்ட்பாரம்பரியங்களை மீட்பது தேசப்பற்றை ஊட்டுவது போன்ற விஷயங்களில் பல்வேறு நடவடிக்கைகள்.எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, முக்கிய இடங்களில் 210 அடி உயரப் பிரத்யேகக் கொடிக்கம்பத்தில் , 60 அடி அகலமும் 90 அடி நீளமும் கொண்ட மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப்பறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நாடு முழுவதும் 20 இடங்களில் அத்தகு கொடிக்கம்பங்கள்.நிறுவப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னை.மெரினாவில் அமைந்துள்ள மகாத்மா காந்திசிலைக்குப் பின்புறம் அதே மாதிரியான பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கவேண்டி, டிரை கலர் டிரஸ்ட் மூவர்ணக்கொடி அறக்கட்டளை சார்பாக அதன்  தலைவர் விஜய் ஆனந்த் ரவிக்குமார் மற்றும் மிருதுள்யா நரசிம்மன் ஆகியோருடன் தமிழக முதலமைச்சர் இடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார் நடிகர் – நாடக சூப்பர் ஸ்டார் – சமூக ஆர்வலர் மற்றும்.பிஜெபி பிரமுகருமான எஸ்.வி.சேகர்.

இது குறித்துப் பேசிய எஸ்.வி.சேகர், “தமிழகத்தில் முதல் பிரமாண்ட கொடிக்கம்பம்  தலைநகரில் அமைவது சிறப்பான ஒன்று. ஆகஸ்ட் 15 முதல் அந்தக்கொடிக்கம்பத்தில் மூவர்ணக்கொடியை பறக்கச் செய்யும் விதத்தில் உடனடியாக அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டோம்… முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்..” என்றார்.

210 உயரக்கொடிக்கம்பங்கள் அமைக்கப் படுவதற்கு முன்பு , சென்னை ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள 150 உயர கொடிக்கம்பம் தான் இந்தியாவிலேயே அதிக உயரமான கொடிக்கம்பமாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.