Share

அபலைப்பெண்களின் வரம், வரலட்சுமி!

K.Vijay Anandh 

வரலட்சுமி சரத்குமார் கடந்த மார்ச் மாதம்  சேவ் சக்தி என்கிற அமைப்பைத் தொடங்கினார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பது, குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வாங்கித்தருவது உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கொண்டு சேவ் சக்தி பரபரப்பாக இயங்கியதை அடுத்து , தமிழகம் முழுவதும் இதன் அலைகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

சேவ் சக்தியின் குறிப்பிடத்தக்க நகர்வாக, அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்களைத் தொடங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிரத்யேகமாக மகளிர் சார்ந்த பிரச்சினைகளுக்கென்றே ஆரம்பிக்கப்படும்  மகிளா நீதிமன்றங்கள் மூலம் மகளிருக்கான நீதியும் நிவாரணமும் உடனடியாகக் கிடைக்கும் என்கிறார் வரலட்சுமி.

மகிளா நீதிமன்றங்கள்.அமைப்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆரம்பக்கட்ட  நடவடிக்கைகளை ஆர்வத்துடன் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த தமிழக முதல்வர் இடப்பாடி பழனிச்சாமி, சேவ் சக்தி அமைப்பினரின் கோரிக்கை  விரைவில் நிறைவேற்றப்பட ஆவண செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.

அரசியலில் அப்பா சரத்குமாரின் செயல்பாடுகள்  , சமூக நோக்கில்  சகா விஷாலின் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கிடையில் வரலட்சுமியின் செயல்பாடுகளும் ஒரே வருடத்தில் தமிழகத்தில் சேவ் சக்தியின் வேவ்ஸ் அடிக்க ஆரம்பித்துவிட்டதையே காட்டுகிறது.

அபலைப்பெண்களின் வரமாக வந்து நிற்கிறார், வரலட்சுமி.