Share

நீங்க சாப்பிடுங்க, குழந்தைகள் படிக்கட்டும்

K Vijay Anandh

விராட் கோஹ்லி டிரஸ்ட் க்கு நிதி திரட்ட அவருடன் லண்டனில் அவருடன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையும், பல கோடீஸ்வரர்கள் அதில் கலந்துகொண்டதையும் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள்.

அதேபோன்ற ஒரு விருந்துக்கு பிரபாகரன் உணவகம் நடத்தும் முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்திருக்கிறார். நீலாங்கரை குழந்தைகள் காப்பகத்தில் பரமாரிக்கப்படும் 30 குழந்தைகளுக்குப் புத்தகம், பை, காலணி மற்றும் சீருடை வழங்க நிதி திரட்டும் பொருட்டு  ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக ஒளிப்பதிவாளராய் இருந்து வெற்றிகரமான வில்லன் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அருள் தாஸ் கலந்துகொள்கிறார்.

வடபழனி பேருந்து நிலையம் பின்புறம் குமரன் காலனி 2 வது தெரு சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரபாகரன் உணவகத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த விருந்து நிகழ்ச்சியில் மட்டன்,சிக்கன், மீன், கருவாடு, முட்டை ஆகியவற்றில் செய்யபட்ட விதவிதமான 22 வகையான தொடுகறிகளுடன், இனிப்பு வகைகள் என்று தடபுடலாகக் கவனிக்க இருக்கிறார்கள்.

கட்டணம் ₹ 500 மட்டுமே, அட ஆச்சிரியமா இருக்கா ,  உடனே போனைப் போடுங்க முத்துராமலிங்கம் 9840914026, ஜெய்லானி 9500092255 , முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் 100 நபர்களுக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆதரவற்ற குழந்தைகள் படிக்க,அளவில்லாமல் சாப்பிடுங்க!

Lunch with Aruldass