Share

ஐம்பதில், அம்புட்டும் தானம்

K.Vijay Anandh

தேவராஜ், மூத்த திரைப்படப் பத்திரிக்கையாளர், சிறந்த குணச்சித்திர  நடிகர். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கயல் படத்தில் இவரது அலட்டிக்கொள்ளாத வில்லத்தனம் பேசப்படவே, அன்று முதல் கயல் தேவராஜ் என்று அழைக்கப்படுபவர்.

விரைவில் வெளிவரவிருக்கும் இவன் தந்திரன் வரை , கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துவிட்ட கயல் தேவராஜ், ஜூன் 18 முதல் தனது ஐம்பதாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்த தருணத்தில், தனது கண்கள் மற்றும் உடலைத் தானமாக எழுதி வைக்கிறார். ஏற்கனவே, தனது இயல்பான எளிமையான பழக்க வழக்கங்களால் இளம் பத்திரிக்கையாளர்கள் முதல் அவரை விட மூத்த பத்திரிக்கையாளர்கள் மனதிலும், மிகவும் நேர்மையான செயல்பாடுகளால் திரையுலகில் அத்துனை நடிகர்கள் – நடிகைகள் மத்தியிலும் நல்ல மனிதர் என்று பெயரெடுத்திருக்கும் தேவராஜ், இப்பொழுது உதாரண புருஷராகவும் உயர்ந்து நிற்கிறார் என்றால் அது மிகையல்ல.