Share

பட்டத்துடன் நம்பிக்கையும் அளித்த விழா

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் சாய் இண்ஸ்டியூசன் கல்வி நிறுவனத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், விஸ்காம், பேஷன் டெக்னாலஜி, ஏர்லைன்ஸ் போன்ற உயர்கல்வி படிப்புகள் கற்றுத்தரபடுகின்றன.

இக்கல்வி நிறுவனத்தில் இந்தாண்டு கல்வியை முடித்துக்கொண்டு செல்லும் 125 மாணவர்களுக்கான  பட்டமளிப்பு விழா சென்னை ராயபேட்டையில் உள்ள மியூசிக் அகடாமியில்  நடைபெற்றது..

இவ்விழாவில் புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் தாமோதரன், ஜுகேஸ் ஆரோரா, கோபிநாத்,  பாலமுருகன்,  தினேஷ் கபிரேசன் ஆகியோருடன் ரமேஷ் மேட்லா, நளனி சம்பத்குமார்,  அபர்ணா ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவர்களுக்குச்  சான்றிதழ்களை வழங்கினர்.

பட்டமளிப்பு விழா மேடையிலேயே மாணவர்களுக்குப் பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிய வேலை உறுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. 9 மாணவர்கள் மலேசியாவில் பயிற்சி பெற முதல் கட்ட தேர்வின் சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில், கலக்கபோவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் பாலா மற்றும் ராஜன் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

” மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களுடன் வந்து தங்கள் கல்வி மற்றும் வேலை உறுதி சான்றிதழைப் பெற்றதில் அவர்களது பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது..” என்று சாய் கல்வி குழுமங்களின் நிறுவனர் டாக்டர் வினோத் குமார் தெரிவித்தார்.